75 நாள் கழித்து தலைகாட்டிய எம்.எல்.ஏ.,: அஞ்சே நிமிஷம், அதிகாரிகளுடன் ஆலோசனை

Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
அவிநாசி: அவிநாசி எம்.எல்.ஏ., வாக இரண்டாவது முறையாக தனபால் (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,75 நாள் கழித்து, நேற்று அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த தனபால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பொதுமக்கள் சிலர், அவரிடம் மனு வழங்கினர்.15 நிமிடம் கட்சி அலுவலகத்தில் இருந்த அவர், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் அறையில் அனைத்து துறை
தனபால், 75 நாள், எம்.எல்.ஏ.,அஞ்சே நிமிஷம், அதிகாரி, ஆலோசனை

அவிநாசி: அவிநாசி எம்.எல்.ஏ., வாக இரண்டாவது முறையாக தனபால் (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,75 நாள் கழித்து, நேற்று அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த தனபால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொதுமக்கள் சிலர், அவரிடம் மனு வழங்கினர்.15 நிமிடம் கட்சி அலுவலகத்தில் இருந்த அவர், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் அறையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்."இப்போது தொகுதிக்குள் கொரோனா நிலவரம் எப்படி இருக்கு? குறைந்திருக்கிறதா? " என, வட்டார மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்டார்.

ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் சில பணிகள் சார்ந்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற அவர், ஐந்து நிமிடத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்து கிளம்பினார்.'பிரச்னைகளை பாத்துக்கலாம்'"அவிநாசி சூளையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பயனாளிகளுக்கு இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது.


latest tamil news




அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாகம் கட்டும் திட்டம், 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதே" என்ற நிருபர்களின் கேள்விக்கு, "அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்து, ஏற்கனவே வழங்கியுள்ளோம்; மற்ற பிரச்னைகளை எல்லாம் பார்த்துக்கலாம்" என்றார்.

அவிநாசி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, ஏ.சி.எம்.எஸ்., தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் ஜெயபால், நகர செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் லதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஹரி, பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
17-ஜூலை-202111:46:50 IST Report Abuse
INDIAN Kumar வயதானவர்களை ஒதுக்கி சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்களை தேர்ந்து எடுங்கள்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
16-ஜூலை-202118:56:34 IST Report Abuse
Dhurvesh அப்புறம் இவனை ஏன் மக்கள் மறுபடியும் தேர்ந்து எடுக்கணும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஜூலை-202118:34:49 IST Report Abuse
Vena Suna கொரோனா காலத்தில் பொறுப்பாக இருக்கிறார். வாழ்க அதிமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X