அவிநாசி: அவிநாசி எம்.எல்.ஏ., வாக இரண்டாவது முறையாக தனபால் (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,75 நாள் கழித்து, நேற்று அவிநாசி எம்.எல்.ஏ., அலுவலகம் வந்த தனபால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்கள் சிலர், அவரிடம் மனு வழங்கினர்.15 நிமிடம் கட்சி அலுவலகத்தில் இருந்த அவர், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் அறையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்."இப்போது தொகுதிக்குள் கொரோனா நிலவரம் எப்படி இருக்கு? குறைந்திருக்கிறதா? " என, வட்டார மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கேட்டார்.
ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் சில பணிகள் சார்ந்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற அவர், ஐந்து நிமிடத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்து கிளம்பினார்.'பிரச்னைகளை பாத்துக்கலாம்'"அவிநாசி சூளையில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பயனாளிகளுக்கு இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது.

அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாகம் கட்டும் திட்டம், 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதே" என்ற நிருபர்களின் கேள்விக்கு, "அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்து, ஏற்கனவே வழங்கியுள்ளோம்; மற்ற பிரச்னைகளை எல்லாம் பார்த்துக்கலாம்" என்றார்.
அவிநாசி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, ஏ.சி.எம்.எஸ்., தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் ஜெயபால், நகர செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் லதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஹரி, பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE