தொடர் போராட்டம் எதிரொலி: கியூபாவில் உணவு, மருந்து பொருட்கள் மீதான சுங்க வரி ரத்து

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஹவானா: கியூபாவில் கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் உணவு, மருந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், 'உணவு, மருந்துப் பொருட்களுக்கான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும்' என்பது மக்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் கடந்த 11ம் தேதி முதல் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர்.அனுமதி பெறாமல்

ஹவானா: கியூபாவில் கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் உணவு, மருந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், 'உணவு, மருந்துப் பொருட்களுக்கான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும்' என்பது மக்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் கடந்த 11ம் தேதி முதல் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர்.



latest tamil news


அனுமதி பெறாமல் நடந்தப்படும் அங்கீகாரமற்ற போராட்டங்கள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள் அங்கு சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த போராட்டங்களால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


இந்நிலையில், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கியூபா செல்கிற பயணிகள் இந்த ஆண்டு இறுதிவரையில் வரம்பின்றி உணவு, மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan - Bangalore,இந்தியா
16-ஜூலை-202120:53:53 IST Report Abuse
Srinivasan கம்யூனிசம் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை. அது போகும் இடமெல்லாம் துன்பம், பற்றாக்குறை, சாவு தான். அப்படி இருந்தும் சிலர் கம்யூனிசத்தை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202118:38:29 IST Report Abuse
Rajagopal கம்யூனிசம், சோசியலிசம் போன்றவை கப்பரையேந்தும் நிலைக்குத்தான் நாட்டை கொண்டு செல்லும். சீமான் போன்றவர்கள் இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும். கேரளாவும் கியூபா மாதிரித்தான். இந்திய இறையாண்மைக்குள் இருப்பதால் பிழைத்தார்கள்.
Rate this:
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
16-ஜூலை-202123:35:33 IST Report Abuse
Ram Ramஅவர்கள் மக்கள் தூபாய் சென்று பொருள் ஈட்டி அனுப்புவதால் தான் கொஞ்சம் வளம் இருக்கிறது...
Rate this:
Cancel
Giri V V - குடந்தை,இந்தியா
16-ஜூலை-202116:22:33 IST Report Abuse
Giri V V போனவருடம் கியூபாவை பற்றி ஆஹா ஓஹோ என்று இங்கு பலர் கம்பு சுற்றினார்கள். அவர்களை தேடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X