தடுப்பூசி பணிகள், பரிசோதனைகளை விரைவுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் பாதிப்புகள் அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‛பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,' எனக் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கோவிட் 2ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், சில மாநிலங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு
PMModi, Covid, Vaccination, பிரதமர் மோடி, முதல்வர்கள்,ஆலோசனை, கோவிட், ஸ்டாலின்

புதுடில்லி: கோவிட் பாதிப்புகள் அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‛பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,' எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கோவிட் 2ம் அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், சில மாநிலங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.


3வது அலையை தடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மோடி அறிவுரை

latest tamil news




அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில நாட்களாக மொத்த பாதிப்புகளில் 80 சதவீதம் 6 மாநிலங்களிலிருந்து பதிவாகிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள் கோவிட் 3ம் அலையை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். கோவிட் அவசர கால நிதியாக மத்திய அரசு ரூ.23,000 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி மாநிலங்களில் பொது சுகாதாரத்துறை, மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதே சமயம், கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-202117:39:14 IST Report Abuse
Venkataramana PM you need to fasten the vaccination, you are taking only pride, not opposite, transfer bad to opponents
Rate this:
Cancel
Yokiyan - Madurai,இந்தியா
16-ஜூலை-202116:29:48 IST Report Abuse
Yokiyan இவ்வளோ அறிவார்ந்த பிரதமர் ஏன் பத்திரிக்ககையாளர்கள் சந்திப்புக்கு அஞ்சுகிறார்?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-202116:19:24 IST Report Abuse
தமிழவேல் நல்ல போட்டோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X