அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு; மறு பரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்பதால் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் அதிகமுள்ள 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) காணொலி வாயிலாக ஆலோசனை
NEET, Stalin, Request, PMModi, நீட், ஸ்டாலின், கோரிக்கை, பிரதமர் மோடி

சென்னை: பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்பதால் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் அதிகமுள்ள 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கோவிட் பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாக பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.


கோவிட் பரவல், தடுப்பு நடிவடிக்கைள் தொடர்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில், கோவிட் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இறப்புகளும் குறைந்து இருப்பதாக சுட்டிக்காட்டினார். தடுப்பூசிகள் வீணாக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளபோதும், ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்று பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, இந்த முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

latest tamil newsதமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, தமிழக அரசு 6 சதவீதத்தில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்னையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கோவிட் தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தேன். அதனை கனிவுடன் பரிசீலிக்கவும். 3ம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.


latest tamil newsநீட் தேர்வு


பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இப்பெருந்தொற்றை கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, மத்திய அரசுடனும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Chennai,இந்தியா
16-ஜூலை-202117:43:04 IST Report Abuse
Sridhar பெறுந்தொற்று காரணமாக பாடங்கள் நடத்தப்படவில்லை. ஆகையால் 10,12,நீட் பரீட்சைகள் மற்றும் வகுப்புக்களை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கலாம் ? ஒரு ஆண்டில் பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தலாம். ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம். மற்ற மாநிலங்கள் ஏன் நீட் பரீட்சைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்று புரிந்து தமிழக அரசும் அவர்களின் வழிகளில் பாடங்கள் பரீட்சை நடத்தலாம்
Rate this:
Cancel
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
16-ஜூலை-202117:41:46 IST Report Abuse
A.SESHAGIRI ஒரு சந்தேகம் முதல்வர் இப்போது கோரிக்கை வைத்தது மத்திய அரசிடமா? அல்லது ஒன்றிய அரசிடமா?
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
16-ஜூலை-202117:18:15 IST Report Abuse
T.Senthilsigamani நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை..நல்ல செய்தி .இனி பாருங்கள் திராவிட சார்பு வெகு ஜன ஊடகங்களின் ஓங்காரங்களை .ஆம் ஸ்டாலின் அவர்கள் சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரி மயிரை பிடித்து உலுக்கிய அளவுக்கு சாதனை புரிந்ததாக புகழ்வார்கள்.நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்த திராவிட போர்வாள் எனவிமர்ச்சனங்களில் , விவாதங்களில் தூள் பரப்புவார்கள். ஸ்டாலினின் அதிரடி ஆட்டத்தால் டெல்லியே கலகலத்தது என தலையங்கங்கள் தீட்டப்படும் .திராவிட தலைவர் கருணாநிதியை விஞ்சும் அளவில் ,ஆரிய சூழ்ச்சியை முறியடித்த திராவிட சாணக்கியர் என பெருமைகள் சூட்டப்படும் .நீட் தேர்வு பெரியாரியத்துக்கு பாதகமானது . அம்பேத்காரியத்திற்கு முரணானது, அண்ணாயிசத்திற்கு ஆபத்தானது கருணாநிதியத்துக்கு எதிரானது என சமூக நீதி சமத்துவம் பேசிய திக திராவிட கருப்பு தாலிபான் கூட்டங்கள், ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் இமாலய சாதனைகள் நிகழ்த்தியதாக புகழாரங்கள் சூட்ட ,அதனை சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்கள் வழிமொழியும் .ஆனால் இத்தகைய புகழ்ச்சிசொல்களுக்கு மனம் மயங்காமல் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுடன் இணக்கம் காண்பித்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் .இது தான் ஸ்டாலின் அவர்களுக்கு நீடித்த புகழை தரும் .முதலவர் ஸ்டாலினின் உரிமைக்குரலுக்கு தமிழக மக்கள் என்றும் துணை நிற்பார்கள் .ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X