யோகி அரசின் கொடூரத்தை பிரதமரின் நற்சான்றால் மறைக்க முடியாது: பிரியங்கா

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று (ஜூலை 15) உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது, 'கோவிட் 2வது அலையை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. 2வது அலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில்

புதுடில்லி: வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று (ஜூலை 15) உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது, 'கோவிட் 2வது அலையை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. 2வது அலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.



latest tamil news



இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:உத்தரப் பிரதேசத்தில் கோவிட் தொற்றால் மக்கள் பெரிய அளவில் இன்னல்களை சந்தித்தனர்; உதவியின்றி தவித்தனர். மோடியும், யோகியும் இதை மறந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறந்துவிடவில்லை.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதிக்கரைகளில் கேட்பாரற்று கிடந்தன.


latest tamil news



பிரதமரின் நற்சான்றிதழால் யோகி அரசின் கொடூரம், அலட்சியப்போக்கு, தவறான மேலாண்மை ஆகியவை மறைந்துவிடாது.இவ்வாறு அவர் பிரதமரையும் யோகி அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-202122:23:04 IST Report Abuse
Kasimani Baskaran உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆஸ்த்ரேலிய அமைச்சர் ஒருவரும் கூட யோகி கோவிட்19 ஐ கையாண்டதை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். லோக்கல் மனிதர்கள் மட்டும் குறுகலான சிந்தனையில் உழன்றுகொண்டு இருக்கிறார்கள்...
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
16-ஜூலை-202121:35:54 IST Report Abuse
Gnanam பொது செயலர், தலைவர், முன்னாள் தலைவர் எல்லாமே ஒரே குடும்பம்தானா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202120:20:25 IST Report Abuse
Lion Drsekar மழைக்காலங்களில் மட்டுமே தவளைகள் வெளியே வரும் .....வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X