போட்டோ ஜர்னலிஸ்ட் மறைவிற்கு குவியும் அஞ்சலி

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
.டேனிஷ் சித்திக்மும்பையைச் சேர்ந்தவர்,பத்திரிகை துறையை விரும்பி ஏற்றவர் புகைப்பட பத்திரிகையாளராக குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் மிகவும் துணிச்சலானவர்.உலகின் புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கான இந்திய புகைப்பட செய்தியாளராக டில்லியில் இருந்தபடி பணியாற்றினார்பயங்கரவாதத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்காக பாதிக்கப்படும் பல்வேறு நாடுகளுக்கு பயணம்

.latest tamil news


டேனிஷ் சித்திக்
மும்பையைச் சேர்ந்தவர்,பத்திரிகை துறையை விரும்பி ஏற்றவர் புகைப்பட பத்திரிகையாளராக குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் மிகவும் துணிச்சலானவர்.
உலகின் புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கான இந்திய புகைப்பட செய்தியாளராக டில்லியில் இருந்தபடி பணியாற்றினார்
பயங்கரவாதத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்காக பாதிக்கப்படும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்.


latest tamil news


மியான்மர் இராணுவத்திடம் இருந்து தப்பி வங்காளதேசத்துக்கு வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழு ஒன்றை சித்திக் படம் எடுத்தார். ரோஹிங்யா முஸ்லிம்களில் ஒருவர் படகிலிருந்து இறங்கி வங்காள தேச மண்ணை தொட்டதும் தான் உயிர்தப்பியதை நம்ப முடியாமல் உணர்ச்சி பொங்க மண்ணைத்தடவிப் பார்ப்பார் அந்த காட்சியை எடுத்ததற்காக புகைப்படக்கலைக்கு வழங்கப்படும் உலகின் தலைசிறந்த விருதான புலிட்சர் விருதினை 2018 ம் ஆண்டு பெற்றவர்.பின்னர் டில்லியில் நடைபெற்ற கலவரம்,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை போன்ற படங்களால் உலகின் கவனத்தை ஈர்த்தவர்.


latest tamil news


Advertisement

ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும்,தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்துவரும் சண்டையை பதிவு செய்ய நிறுவனத்தின் சார்பில் அங்கு சென்றிருந்தார்.இரண்டு நாட்களுக்கு முன் கந்தாகாரில் தலிபான் படைகள் முன்னேறி வருவதை நெருக்கமாக சென்று படம் எடுத்த போது பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பினார். அதை வீடியோகவும் பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்தப் பகுதியில் படம் எடுக்க சென்றவர் இந்த முறை தலிபான் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பமுடியாமல் சிக்கி இறந்து போனார்.


latest tamil news


நேற்று இரவு அவர் இறந்ததை உறுதிப்படுத்திய ஆப்கானிஸ்தானுக்கான இந்திய துாதர், டேனிஷ் சித்திக்கின் மறைவிற்கு தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் தமிழக முதல்வரும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news


இ்பபடி உலகம் முழுவதும் உள்ளவர்களை தனது உன்னத படங்களால் ஈர்த்த டேனிஷ் சித்திக்கின் மறைவு பேரிழப்புதான், குறிப்பாக போட்டோ ஜர்னலிஸ்ட் என்று சொல்லப்படும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து பெருமை தேடித்தந்தவர் அவர்.


latest tamil news


மேல்நாட்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே பெற்று வந்த புலிட்சர் விருதை இந்தியர்களும் பெறமுடியும் என்பதை நிருபித்த இந்த திறமைசாலியின் புகழ் புகைப்படக்கலை உள்ளளவும் பேசப்படும்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Ganesan - Vienna,ஆஸ்திரியா
16-ஜூலை-202119:58:55 IST Report Abuse
Ramesh Ganesan RIP. DS handed down Death Sentence by brothers.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X