'டிஜிட்டல்' யுகத்திலும் தகவல் அனுப்ப புறாவை தேடுகிறோமா: சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:ஜாமின் உத்தரவுகிடைக்காமல் கைதிகள் விடுவிக்கப்படாத வழக்கில், 'இந்த டிஜிட்டல் யுகத்திலும் தகவல் அனுப்ப, இன்னும் புறாக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோமா?' என, உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.சிறார் நீதிமன்றம்ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேர், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் உள்ளனர். கொலை
டிஜிட்டல்' யுகம், தகவல், புறா, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:ஜாமின் உத்தரவுகிடைக்காமல் கைதிகள் விடுவிக்கப்படாத வழக்கில், 'இந்த டிஜிட்டல் யுகத்திலும் தகவல் அனுப்ப, இன்னும் புறாக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோமா?' என, உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.


சிறார் நீதிமன்றம்

ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேர், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் உள்ளனர். கொலை நடந்த போது, இவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்களை ஜாமினில் விடும்படி சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து கைதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை இடைக்கால ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு மாதம் ஆகியும், கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து இதுபோல உச்ச நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றாத விவகாரங்களை, சுயமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முடிவு செய்தது.

அதன்படி நேற்று இந்த அமர்வு முன், 13 கைதிகளின் ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பி., அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ''சமீபத்தில், நீதிமன்ற உத்தரவுகளை திருத்தி மோசடி செய்த சம்பவங்கள் நடந்தன. இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற வலைதளத்தில் உத்தரவு பதிவேற்றம் செய்த பின் தான், கைதிகளை விடுவிப்பது வழக்கம்,'' என்றார்.


பாதுகாப்பான முறை



இதையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவு:நாம் தகவல் தொழில் நுட்ப காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இருந்தபோதிலும் தகவல்களை அனுப்ப, வானில் பறக்கும் புறாக்களுக்கு காத்திருக்கிறோம்.நீங்கள் சொல்வது அப்படித்தான் உள்ளது. நீதிமன்ற ஜாமின் உத்தரவு பதிவேற்றம் செய்யாததால் கைதிகளை விடுவிக்கவில்லை என்பது அபத்தமானது.

இனி, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் மாநில, மாவட்ட நீதிமன்றங்களுக்கு விரைவாக, பாதுகாப்பான முறையில் கிடைக்க வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை செகரட்டரி ஜெனரல் உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு உதவியாக, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நியமிக்கப்படுகிறார்.

அவருடன், செகரட்டரி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் கலந்தாலோசித்து திட்ட அறிக்கையை இரு வாரங்களில் அளிக்க வேண்டும். அந்த திட்டத்தை ஒரு மாதத்திற்குள் அமல்படுத்த உத்தரவிடப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
18-ஜூலை-202119:30:52 IST Report Abuse
Hari எதுகைமோனை நல்லாயிருக்கு ,நாட்டில் மும்மாரி மழை பொழிகிறதா ஆடர்லி ?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
17-ஜூலை-202123:30:27 IST Report Abuse
bal மன்னர் காலத்தில் கூட வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வந்தன...இந்த சுதந்திரம் கிடைத்த பிறகு வழக்கு முடிவுக்கு வருவதென்பது சொப்னத்தில்தான்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
17-ஜூலை-202123:29:17 IST Report Abuse
bal வாய்தா கொடுக்கும்போது இந்த யோசனை இல்லையோ...ஏன் வாய்தா கொடுக்கின்றீர்...பல வழக்குகளில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X