சோனியாவுக்கு அமரீந்தர் கடிதம் பஞ்சாப் காங்., பிளவுபடுகிறதா?

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை அடிக்கடி சந்தித்து வருவதால், முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாக, காங்., தலைவர் சோனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை
 சோனியா , அமரீந்தர் ,கடிதம் பஞ்சாப் காங்., பிளவுபடுகிறதா?

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை அடிக்கடி சந்தித்து வருவதால், முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதை வெளிப்படுத்தும் விதமாக, காங்., தலைவர் சோனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இரு தலைவர்களையும் டில்லிக்கு அழைத்து காங்., தலைமை ஆலோசனை நடத்தியது.இதையடுத்து, சட்டசபை தேர்தலில் அமரீந்தர் சிங்கையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில், சித்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ராகுல், பஞ்சாப் மாநில காங்., பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர். சித்துவை காங்., தலைமை அடிக்கடி சந்தித்து பேசுவதால், முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளார்.

காங்., தலைவர் சோனியாவுக்கு,கடிதம் ஒன்றை அமரீந்தர் சிங் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், 'பஞ்சாப் மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என, கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாப் சட்டசபையில் அமரீந்தர் சிங்குக்கு, 65 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், விரைவில் கட்சி பிளவுபட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
17-ஜூலை-202117:45:04 IST Report Abuse
BALU இறைவாஇது விரைவில் நடைபெற வேண்டும்.பஞ்சாபிலும் காங்கிரஸ் காணாமல் போக வேண்டும்.அண்ணன் ராகுல் அவர்கள் இதை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.நம் தலைமுறையோடு காங்கிரஸ் இந்தியாவிலிந்து முற்றிலுமாக ஒழிந்து போகட்டும். காங்கிரஸ் இல்லாத பாரதம் அதுவே உண்மையான வல்லரசு. ஜெய்ஹிந்த்தமிழ் வெல்க
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-ஜூலை-202115:32:44 IST Report Abuse
elakkumanan நல்ல மக்கள் ஆதரவு உள்ள ஒரே மாநில தலைமை...........அதுவும் முடிஞ்சது....இனி, காரிய கமிட்டி கூடி திதி செய்ய நாள் குறிக்கலாம் ........... ராவுளு பிரதம வேட்பாளர்? ஐயோ....ஐயோ.......கட்சிக்கு தலைமை இல்லை, இப்போ, கட்சியும் இல்லை.... இதுல, பிரதம மந்திரி பதவி ..................ஏம்பா, எப்புடிப்பா சிரிக்காம, இந்த ராவுளு, பிரியங்கா அக்கா பேட்டி எல்லாம் படிச்சு, கருத்தெல்லாம் எழுதுறீங்க................ஒரு விஷயம்....ஒரே ஒரு விஷயம்..........நாட்டுக்கு நல்லதா, உருப்படியா...செஞ்சதாக சொல்லமுடியுமா? கேடு கேட்ட கான் கிராஸ் ................அந்த வயநாடு உறுப்பினரை, திரும்பவும் அங்கேயே ஜெயிக்க ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க.....அதுவும் புட்டுக்கிட்டா, பாகிஸ்தான் அல்லது இத்தாலி அல்லது சீனாவில் தான் போட்டியிடனும்......சீனாவில் தேர்தல் இல்லை.....இல்லைனா, பாட்டையா போகலாம்....மாநில தலைமை , மக்கள் ஆதரவுடன் இருந்தால், அம்மாவுக்கும் மகனுக்கும் பொறுக்காதே...இது, பரம்பரை வியாதி....பாட்டி காலத்து வியாதி......
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
17-ஜூலை-202113:38:33 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN திரு. மன்மோகன்சிங் ஜ பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக போடலாம். காங்கிரஸ் நிலமையை பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகிறது. காந்தி அடிகள் கூறியது போல காங்கிரசை அப்போதே கலைத்து இருக்கலாம். மக்களே காங்கிரசை ஓரம் கட்டி விட்டார்கள். வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X