எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரவிசங்கர் பிரசாத் இல்லையாம்; குஜராத்திலிருந்து வரப் போவது யார்?

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நான்கு ஆண்டுகளாக இப்பதவியில் நீடிப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க, மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்தது.மத்தியில் அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், அடுத்த கவர்னர் என்ற பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது அம்முடிவில்,மாற்றம் தென்படுகிறது.தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மத்திய அரசுடன் மோதல் போக்கை
TN Governor, Ravi Shankar Prasad, BJP, கவர்னர், ரவிசங்கர் பிரசாத், குஜராத், யார்?

தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நான்கு ஆண்டுகளாக இப்பதவியில் நீடிப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க, மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்தது.

மத்தியில் அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், அடுத்த கவர்னர் என்ற பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது அம்முடிவில்,மாற்றம் தென்படுகிறது.தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.இதுவரை இருந்த முதல்வர்கள் எல்லாம், 'மத்திய அரசு' என்று கூறி வந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்கின்றனர்.
சட்டசபையில் கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை நீக்கி விட்டனர்.

'நீட்' தேர்வு, மேகதாது அணை உட்பட பல்வேறு பிரச்னைகளில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.எனவே, தி.மு.க., அரசுக்கு 'செக்' வைக்கும் வகையில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ரவிசங்கர் பிரசாத்தை இங்கு அனுப்பாமல், குஜராத்தை சேர்ந்த ஒருவரை கவர்னராக நியமிக்க, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திட்டமிட்டுள்ளனர்.அவர் யார் என்ற விபரத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.

மேலும், தி.மு.க., அரசின் தவறுகளை வலிமையாகச் சுட்டிக்காட்டி தட்டிக் கேட்க, அ.தி.மு.க.,வினர் தயங் கு வதால், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உடைய பா.ஜ.,வே, எதிர்க்கட்சி போல செயல்பட முடிவு செய்துள்ளது.அதற்கு ஏற்ற வகையில், கட்சி மேலிடம் இந்த நான்கு பேருக்கும் கட்டளை பிறப்பித்து வருகிறது.

- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
18-ஜூலை-202114:23:00 IST Report Abuse
தமிழ்வேள் கிரண் பேடி அவர்கள் தமிழக ஆளுநராக நியமிக்கப்படவேண்டும் ...திருட்டு திமுகவின் டப்பா டான்ஸ் ஆடவேண்டும் ...ரொம்ப தமாஷாக இருக்கும் ..
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அமீத் ஷாவே வரலாமே
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202115:11:15 IST Report Abuse
Easwar Kamal ரெட்டை குழல் துப்பாக்கிகல் யாரும் அமைதியா ஆட்சி நடத்திர கூடாது. இருக்கிற கவர்னர் எல்லாம் குலாய் அடீ சண்டை போடணும் அப்பதான் நல்ல கவர்னர். தமிழ்நாடு ஒன்னும் பாண்டிச்சேரி கிடையாது வருகின்ற கவர்னர் கவர்னர் ஓழுங்க இருந்தால் எல்லாருக்கும் நாளளது. பிஜேபி ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் இன்னும் சொற்ப ஆண்டுதான் உள்ளது. ஆட்சி மாறலாம் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். இன்னும் இருக்கின்ற ஆட்சி காலத்தில் கொஞ்சம் நல்ல பெயரை எடுக்க முயட்சி செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X