வீட்டில் தடுப்பூசி போட்ட பா.ஜ. - எம்.பி.யால் சர்ச்சை

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி-மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ. - எம்.பி. பிரக்யா தாக்குர் 51 தன் வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை அருகே உள்ள மாலேகான் என்ற இடத்தில் 2008ம் ஆண்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில் பா.ஜ. வை சேர்ந்த பிரக்யா தாக்குர் கைது

புதுடில்லி-மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ. - எம்.பி. பிரக்யா தாக்குர் 51 தன் வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.latest tamil news


மஹாராஷ்டிராவின் மும்பை அருகே உள்ள மாலேகான் என்ற இடத்தில் 2008ம் ஆண்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில் பா.ஜ. வை சேர்ந்த பிரக்யா தாக்குர் கைது செய்யப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு 2017ல் ஜாமின் வழங்கப்பட்டது.கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. சார்பில் மத்திய பிரதேசத்தில் போட்டியிட்டு வென்றார்.தன் உடல்நலத்தை காரணம் காட்டி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.

இந்நிலையில் பிரக்யா தாக்குர் திருமணம் ஒன்றில் நடனமாடுவது மற்றும் கூடைப்பந்து விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியானது.இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.இந்நிலையில் தன் முதல் 'டோஸ்' தடுப்பூசியை ம.பி. யில் உள்ள வீட்டில் வைத்து பிரக்யா தாக்குர் சமீபத்தில் போட்டுக் கொண்டார்.தடுப்பூசி கொள்கையின்படி முதியோர் மாற்று திறனாளிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட விதிமுறை அனுமதிக்கிறது.


latest tamil news


எனவே பிரக்யா தாக்குர் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என மாநில தடுப்பூசி அதிகாரி விளக்கம் அளித்தார்.பிரதமர் முதல்வர்கள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று தடுப்பூசி போடுகின்றனர். திருமணத்தில் குத்தாட்டம் போட முடிந்தவரால் மருத்துவமனை செல்ல முடியாதா என காங். செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா கேள்வி எழுப்பிஉள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
17-ஜூலை-202110:50:49 IST Report Abuse
sahayadhas இது சமுதாய சீர்குலைப்பு குற்றம் அல்லவா.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
17-ஜூலை-202109:58:32 IST Report Abuse
GANESUN முத்தமிழ் வித்தவரு சக்கர நாற்காலியிலேயே டெல்லிக்கு காவடி எடுத்து குடும்பத்துக்கு மத்திய மந்திரி பதவிக்கு கையேந்திட்டு, மானாட மயிலாட. பாத்துட்டு சட்டசபைக்கே போகாம சம்பளம் வாங்கினாரே.. முட்டுங்க வசதியா மறந்திட்டாங்கபோல.
Rate this:
ramesh - chennai,இந்தியா
17-ஜூலை-202110:13:02 IST Report Abuse
rameshசர்க்கர நாற்காலி என்று இறந்தவரை கிண்டலடிப்பது மக கீழ் தரம் .இதே சர்க்கர நாற்காலி நிலை முதுமைல் உங்களையும் அமர வைக்கலாம் .அப்போது அதன் வலி தெரியும் நண்பரே...
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
17-ஜூலை-202111:52:23 IST Report Abuse
Nellai Raviஉண்மை தான். அவர் சக்கர நாற்காலியை கிண்டல் அடிக்க வில்லை. சக்கர நாற்காலியில் இருந்தும், மத்திய மந்திரி பதவிக்காக சென்றாரே அதை தான் கிண்டல் செய்து இருக்கிறார்....
Rate this:
Cancel
Ramanujan - Nagercoil,இந்தியா
17-ஜூலை-202109:32:22 IST Report Abuse
Ramanujan ரஜினிகாந்த் எந்த மருத்துவ மனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று யாராவது சொல்வார்களா?நாமெல்லாம் அடிமை மனம் கொண்டவர்கள். நான் வீட்டிற்கு வர முடியாது, மையத்திற்கு வாருங்கள் என்று சொல்லும் தைரியம் இந்த ஊழியர்களிடம் எதிர் பார்க்க கூடாது. இதை அனுபவிக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று நினைக்கும் பணக்காரர்களும் ஆள்பவர்களும் இந்த நாட்டில் மிக அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X