அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொற்று பரவலுக்கு வழிவகுக்கும்; நீட் தேர்வுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வழியாக நேற்று கலந்துரையாடினார்.அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை புதிதாக பொறுப்பேற்ற அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான்.என் அரசு இச்சவாலை எதிர்கொண்டு உயிரிழப்புகளை குறைத்து

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வழியாக நேற்று கலந்துரையாடினார்.



latest tamil news


அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை புதிதாக பொறுப்பேற்ற அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான்.என் அரசு இச்சவாலை எதிர்கொண்டு உயிரிழப்புகளை குறைத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.தமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி. தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை எமது அரசு 9 சதவீதத்தில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளது.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இரண்டு கோடி குடும்பங்களுக்கு இரு தவணைகளில் 4 000 ரூபாயை கொரோனா நிவாரண தொகையாக கொடுத்துள்ளோம். மேலும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்த குடும்பங்களுக்கு வழங்கி உள்ளோம்.

மத்திய அரசு முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. இதேபோல் தகுதி உடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்.தற்போது நிலவும் சூழலை கருத்தில் வைத்து கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. சேவையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


latest tamil news


மூன்றாம் அலை வரும் என கூறப்படுகிற நிலையில் அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதை எதிர்கொள்வதற்கு வசதியாக மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் 'நீட்' போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுக்கும். எனவே இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூலை-202122:03:45 IST Report Abuse
ராமகிருஷ்ணன் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத திமுக அரசு வெக்கம் மானம் சூடு சொரனை ஈனம் ஏதாவது இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு போய்விடுங்க, எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறை வேற்றாமல் ஆட்சியில் தொடர்வது மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி பிடித்த ஆட்சி கலைக்க பட வேண்டும். இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
17-ஜூலை-202122:01:04 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இவர் எதிர் கட்சி தலைவர் ஆக இருக்க தான் லாயக்கு. முதல்வர் பதவி ஏதோ அதிர்ஷ்டத்தில் கிடைத்தது.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
17-ஜூலை-202118:13:55 IST Report Abuse
 N.Purushothaman ஏன் நீட் தேர்வு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு ஊசி போட்டு தேர்வை எழுத வைக்கலாமே ....குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் பேர் தான் எழுத போறாங்க .... இவர்களு தடுப்பு ஊசி போடுவது ஒன்றும் கடினமான வேலை இல்லையே ....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
18-ஜூலை-202123:16:08 IST Report Abuse
madhavan rajanஎப்போதுமே நாங்கள் நேர்வழியில் சிந்திக்க மாட்டோம். எங்களுக்கு நீட் தேர்வை எப்படி ரத்து செய்வது என்பது தெரியும் என்று வீரவசனம் பேசிய இவர் மகன் இப்போது தலைமறைவாகிவிட்டாரா? இதில் வெக்கம், மானம் எல்லாம் இருந்தால் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று வசனம் வேறு. இவர்கட்சிக்கு அது இல்லை என்று நிரூபித்துவிட்டனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X