ரூ.1 லட்சம் அபராதம்; நடிகர் விஜய் 'அப்பீல்'

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (82) | |
Advertisement
சென்னை : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த 'ரோல்ஸ் ராய்ஸ்'
Vijay, Actor Vijay, Vijay Car

சென்னை : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ௧ லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவும் 'ரியல் ஹீரோ'க்களாக இருக்க வேண்டும்; 'ரீல் ஹீரோ'க்களாக இருக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil newsஇந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மஞ்சுளா அடங்கிய அமர்வில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
17-ஜூலை-202122:57:00 IST Report Abuse
R PURUSHOTHAMAN இவர் என்ன கூத்தடிதானே என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தனக்கு யாரும் வரி போட கூடாது என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார். அதுவும் இத்தனை காலம் கடத்தி இருக்கிறார். தயவு செய்து எல்லாரும் மக்கள் டிவி பாருங்க அதில் கூத்தாட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த கூத்தாடிகள்தான் இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து சீன் போட்டு கொண்டிருக்கிறார்கள். முதலில் சினிமா மோகத்தை விட்டொழியிங்கள் மக்களே அப்புறம் இந்தியா வல்லரசாக தானாகவே மாறிவிடும். சினிமாவை சினிமாவாக பாருங்கள். அது நிழலுமில்லை நிஜமுமில்லை இதை உணருங்கள்.
Rate this:
Cancel
17-ஜூலை-202121:47:23 IST Report Abuse
அ சுந்தரமூர்த்தி அரசாங்கம் சொகுசு காருக்கு வரி போட்டது தப்புண்னு விஜய் மீண்டும் அப்பீல் செயது இருக்கிறார் வருமான வரி அப்பீல் என்றால் பரவாயில்லை சுய கவுரவம் பார்காமல் இவர்நடிக்கும் பட முதலாளிகளிடம் சொன்னால் சொடுக்கு போடர நேரத்தில் முடிய வேண்டியதை இவர் சினிமா மாதிரி ஒரு வோட்டுக்காக சார்ட்டர் விமானத்தில் வருவது போல் இந்த விஷயத்தை நினைக்கிறார் போல
Rate this:
Cancel
Adiyamon V Shankar - Chennai,இந்தியா
17-ஜூலை-202117:09:42 IST Report Abuse
Adiyamon  V Shankar இவர் என்ன கூத்தடிதானே என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தனக்கு யாரும் வரி போட கூடாது என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார். அதுவும் இத்தனை காலம் கடத்தி இருக்கிறார். தயவு செய்து எல்லாரும் மக்கள் டிவி பாருங்க அதில் கூத்தாட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த கூத்தாடிகள்தான் இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து சீன் போட்டு கொண்டிருக்கிறார்கள். முதலில் சினிமா மோகத்தை விட்டொழியிங்கள் மக்களே அப்புறம் இந்தியா வல்லரசாக தானாகவே மாறிவிடும். சினிமாவை சினிமாவாக பாருங்கள். அது நிழலுமில்லை நிஜமுமில்லை இதை உணருங்கள்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-ஜூலை-202117:49:12 IST Report Abuse
sankarஒரு லட்சம் விஜய்க்கு ஒரு விஷயமல்ல . சட்ட போராட்டம் நடத்தி தான் கேட்டது சரி என்று சொல்ல வருகிறார் . லேட் அஸ் வெயிட் அண்ட் சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X