மோடி அரசு மீது சசிதரூர் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை : ரபேல் விவகாரம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து பார்லிமென்டில் பேசுவோம் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜூன் மாதத்தில் மட்டும் எட்டு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை தான் இதற்கு காரணம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக


சென்னை : ரபேல் விவகாரம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து பார்லிமென்டில் பேசுவோம் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார்.



latest tamil news




சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜூன் மாதத்தில் மட்டும் எட்டு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை தான் இதற்கு காரணம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 100 டாலராக அதாவது 7௦௦௦ ரூபாய்க்குள் இருந்தது.அப்போது பெட்ரோல் விலை 65 ரூபாயும் டீசல் விலை 44 ரூபாயும் இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் பேரல் விலை 75 டாலராக உள்ளது.


latest tamil news




பெட்ரோல் விலை 100 ரூபாயாகவும் டீசல் விலை 90 ரூபாயாகவும் உள்ளது.பெட்ரோல் டீசல் மீதான வரி மற்றும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். வரி வருவாயை மாநில அரசுகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரசும் விசாரணை கேட்டது. ஆனால் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனவே பார்லிமென்டில் பேசுவோம்.கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்தும் பார்லிமென்டில் எழுப்புவோம். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில் மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. இதில் முதல்வரின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
17-ஜூலை-202114:38:07 IST Report Abuse
Mayavan Mayavan சொல்லிட்ட இல்ல. உன் பொண்டாட்டி எப்படி இறந்தார். அந்த பிரச்னையை முதல்ல பாரு. ரைட் போலாம்.
Rate this:
rajan - erode,இந்தியா
17-ஜூலை-202120:09:24 IST Report Abuse
rajanஅடுத்தவன் பெண்டாட்டியை பற்றி பேசுற நீ உன் பெண்டாட்டியை பற்றி மற்றவர்கள் பேசினால் என்ன செய்வாய்...
Rate this:
Cancel
17-ஜூலை-202114:07:29 IST Report Abuse
Raghasrin இப்போது தான் புரிகிறது ஏன் தலைமை பதவி இவருக்கு கிடைக்கவில்லை என்று
Rate this:
Cancel
17-ஜூலை-202110:47:10 IST Report Abuse
மும்பை நாநா பிரதமரின் என்ற வார்த்தைக்கு முன் முன்னாள் பிரதமர் என்று சொல்லி இருக்கணும். நீங்கள் போட்ட பாண்டு களுக்கு யார் பணம் கொடுப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X