நாங்களும் குடிகாரன் தான்..: வைரலான 'குடிகார' குரங்கு

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மாண்ட்லா : மதுபான கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று, மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ம.பி.,யில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ம.பி., மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்துள்ளது. விற்பனையாளர் இதனை தடுக்காமல், குரங்கை அனுமதித்திருக்கிறார். சாவகாசமாக அங்கிருக்கும் டேபிளில்
Monkey, drinks, alcohol, liquor, குரங்கு, மதுபானம்

மாண்ட்லா : மதுபான கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று, மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ம.பி.,யில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ம.பி., மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்துள்ளது. விற்பனையாளர் இதனை தடுக்காமல், குரங்கை அனுமதித்திருக்கிறார். சாவகாசமாக அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்த குரங்கு, வாய் உதவியுடன் பாட்டிலை திறந்து விடுகிறது. அப்போது கடைக்காரர் பிஸ்கட் ஒன்றை குரங்கிற்கு அளிக்கிறார். அதனை வாங்காமல், மதுவை குடிப்பதில் அக்கறை காட்டிய குரங்கு, மேஜையில் அமர்ந்தபடி, மதுவை அப்படியே குடிக்க ஆரம்பிக்கிறது.


latest tamil news




இதனை அங்கு சுற்றி இருப்பவர்கள் கைதட்டி வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோவை ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாக பரவி வருகிறது. குரங்கை விரட்டாமல், அதனை மது குடிக்க அனுமதித்த விற்பனையாளருக்கு விலங்குகள் நல விரும்பிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:39:48 IST Report Abuse
meenakshisundaram பாருங்க இந்த ஆட்சியிலே குரங்கு கூட குடிக்க ஆரம்பிச்சுட்டுதா?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஜூலை-202116:02:12 IST Report Abuse
Priyan Vadanad வேடிக்கையை வேடிக்கையாய்த்தான் பார்க்கவேண்டும். மனித உரிமை ஆர்வலர்களுக்கு கொஞ்சம் வேடிக்கையுணர்வும் தேவை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூலை-202113:26:34 IST Report Abuse
தமிழவேல் பிஸ்கட்டா தாகத்தைத் தீர்க்கும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X