பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச புகார் எதிரொலி; சி.எம்.டி.ஏ., அதிரடி

Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : ''சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் திட்ட அனுமதி தொடர்பான பணிகளுக்காக, பொதுமக்களை வரவழைக்க கூடாது,'' என, உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான திட்ட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று, நில வகைபாடு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யலாம்.


சென்னை : ''சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் திட்ட அனுமதி தொடர்பான பணிகளுக்காக, பொதுமக்களை வரவழைக்க கூடாது,'' என, உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான திட்ட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று, நில வகைபாடு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யலாம். இப்பதிவு அடிப்படையில் பரிசீலனை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.ஆனால் சி.எம்.டி.ஏ.,வில் திட்ட அனுமதி பிரிவு அதிகாரிகள், 'ஆன்லைன்' விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில்லை.

மேலும், விண்ணப்பங்களின் காகித பிரதியை கேட்பதால், பொதுமக்கள் நேரில் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.பொது மக்கள் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளை நேரில் சந்திப்பதால், லஞ்ச வசூல் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. சி.எம்.டி.ஏ.,வுக்கு புதிதாக வந்துள்ள உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.


latest tamil news




இதன்படி, கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சம்பந்தமாக எழும் சந்தேகங்களை இ - மெயில், மொபைல் போன் வாயிலாக சம்பந்தப்பட்ட நபர்களிடம், தொடர்பு கொண்டு தீர்க்க உத்தரவிட்டுள்ளார். நேரில் வர விண்ணப்பதாரர்களை அழைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

விண்ணப்ப பரிசீலனை பணிகளை, முழுமையாக 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்வதற்கான பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார். இதனால், சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு பொது மக்கள் நேரில் வருவது முற்றிலுமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
17-ஜூலை-202114:30:17 IST Report Abuse
Mayavan Mayavan பவாரியஸை ஒன்றும் செய்ய முடியாது. அவனுங்கள திருத்த முடியாது. அவங்களே திருந்தினால்தான் உண்டு.
Rate this:
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-ஜூலை-202114:29:32 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj வரவேற்கப்படவேண்டிய சட்ட அமுல்படுத்தல் வாழ்த்துக்கள் அதே போன்று வரைபடப்படி இல்லாது கட்டுமானப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பொது இட ஆக்கிரமிப்பு சாலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றையும் அதிரடி ஆய்வு செய்து அகற்றப்படவேண்டும்
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
17-ஜூலை-202112:13:20 IST Report Abuse
visu ஒரு சில உருப்படாத சட்டங்கள் தான் எல்லாவாற்றையும் சீர் குலைகின்றன . 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டுபவர் முன்னாள் 10. அடி மற்ற பக்கங்களில் 3. அடி விட சொன்னால் என்ன செய்வார் லஞ்சம் கொடுத்தால் இந்த சட்டத்தை மீறி வீடு கட்டி கொள்ளலாம் ஒரு சமையலறைக்கு இதிஹானி ஆயிரம் என்று சென்னை லஞ்சம் நிர்ணயிக்க படுகிறது எல்லாவற்றையும் ஆன் லைனில் கொண்டுவந்தால் லஞ்சம் குறையும்தான் எழுத்துபூர்வமாக மெயில் மூலம் நிராகரிப்பு காரணம் அளிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X