அனைத்தும் தமிழில் இருந்தால் பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க முடியாது...

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். சட்டத்துறையிலும், நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்'நல்ல எண்ணம் தான். அனைத்தும் தமிழில் இருந்தால், பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று
அனைத்தும் தமிழில் இருந்தால் பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க முடியாது...

மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். சட்டத்துறையிலும், நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'நல்ல எண்ணம் தான். அனைத்தும் தமிழில் இருந்தால், பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க முடியாது. நம் மாநிலத்தையே சுற்றி வர வேண்டியது தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை, 10 ஆண்டுகளாக பாழடைய வைத்து விட்டனர். வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும். அங்கு அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு


'அப்படி செய்தவர்களை, பத்து திருக்குறளை ஒப்புவிக்க கூறலாம்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேட்டி.முக பவுடர், உதட்டு சாயம், சருமத்தை வெள்ளை ஆக்கும் கிரீம் தயாரிக்கும் பாபா ராம்தேவ் கம்பெனிக்கு 5 ஆண்டு வரி கிடையாதாம். ஆனால் கொரோனா தடுப்பு ஊசிக்கு வரி. மோடி ஆட்சியில் அம்பானி, அதானி கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்கள்!
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news
'ராம்தேவ் போல, சுதேசி சிந்தனையுடன் விளங்கும் நிறுவனங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சும்மா, சாமியார் தானே என சாடாதீர்கள்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ., இயக்கப்பட்ட பஸ்கள் இனி, ஏழு ஆண்டுகள் அல்லது, 12 லட்சம் கி.மீ.,கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதை சமாளிக்கும் வகையில், பணியாளர்களின் நியமனத்தை அதிகரிக்க வேண்டும்.
- அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் ராதாகிருஷ்ணன்


'வேலைன்னு இருந்தால் பளு இருக்கத் தான் செய்யும். இதுபோல தனியார் துறையில் பேச முடியுமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டிநவீன உத்தர பிரதேசத்தை உருவாக்கியவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். அந்த மாநிலத்தின் ரவுடிகள் ராஜ்ஜியத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தச் செய்தது, காசி மாநகரத்தை மருத்துவ நகரமாக மாற்றியது எல்லாம் ஆதித்யநாத் சாதனை தான்.
- பா.ஜ., தேசிய தலைவர் நட்டா


'உ.பி., மாநில முதல்வரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள் போலிருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-202102:26:19 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தாய் மொழியுடன் ஆங்கிலமும் அவசியம். இரு மொழிக் கொள்கை என்பது இதுதான்.
Rate this:
Cancel
17-ஜூலை-202123:34:17 IST Report Abuse
அப்புசாமி ஆக மொத்தம் நம்ம ஆளுங்களுக்கு பவுடர், உதட்டுசாயம், லேகியம்தான் செய்யத்தெரியும். அதான் ஆத்மநிர்பரா..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஜூலை-202103:37:39 IST Report Abuse
meenakshisundaramராம்தேவ் அவர்கள் இந்தியாவில் இயங்கும் மல்டிநேஷனல் கம்பெனி களுக்கு கொடுக்கும் சவால் எந்த அளவுக்கு என்பது மெத்த படித்தவர்களுக்கே தெரியும் ,கோடிகளில் அவர்கள் சம்பாதிப்பது பேஸ்ட் .கிரீம் போன்ற ஐட்டம்களே.மேலும் அவர் athudan நிறுத்திக்கொள்ளவில்லை மருந்து ஆயுர்வேதம் போன்ற விஷயங்களிலும் மிக மலிவான விலையில் தயாரிக்கிறார் .-உலகத்திலேயே இல்லாத ,யாரும் செய்யாத திசயம் ,சாதனை - கோடிகளில் டர்ன் ஓவர் செய்தலும் அவர் ஒருவரே தரையி படுத்துறங்கும் தலைவர்.ஆங்கில மோகத்தில் நாம் மூழ்கி இருந்து 'இம்புட்டுதானா' என்று சொல்வது அறியாமையின் உச்ச கட்டம் .அவரின் நிறுவனத்தில் உயர் பதவிகளில் இயங்கும் நிர்வாகிகள் வெறும் சேவை எண்ணத்துடனே வேலை செய்வதால் நிர்வாக செலவு குறைவு.இது பாமரனுக்கு தெரியாது என்பதில்லை படித்த வர்களுக்கு தெரியாது .விளம்பரம் இன்றி இயங்கும் நிர்வாகம் ஆனால் 'பதஞ்சலி 'என்னும் ட்ரடே மார்க்கே மிக வலியதாக சந்தையை பிடித்துக்கொண்டுள்ளது.அந்த பொருட்களை வாங்கி பார்த்தே ஒருவர் அபிப்ராயம் கூற வேண்டும் -ஒரு காலத்தில் ஈவேரா சொன்னது போல 'குண்டூசி 'கூட செய்ய நம்மால் முடியாது என்று புலம்புவது அறியாமை .இன்று 'தடுப்பூசி 'ஏ மிக நேர்த்தியாக செய்யம் நாடு இது....
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
17-ஜூலை-202118:04:18 IST Report Abuse
Arachi When did this gentleman get this wisdom? Go to tourist spots like Mahabalipuram and Kanyakumari.You can see the guides to speak in different languages.In which school they have gone to learn and speak different languages? Learning the subjects in their respective mother mother tongue is more easier than foreign language. All by according to the need and situation.Our brain is capable of learning different languages if interest is there.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X