பொது செய்தி

தமிழ்நாடு

அரியமலையில் தவிக்கும் யானைக்கூட்டம்; வழித்தடங்களை மறிப்பது காரணமா

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
செம்பட்டி-மேற்கு தொடர்ச்சி மலையின் கன்னிவாடி வனபகுதியைச் சேர்ந்த ஆடலுார், பன்றிமலை, பண்ணைப்பட்டி, நீலமலைக்கோட்டை பகுதியில் யானைகள் நடமாட்டம் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.இரு ஆண்டுகளாக பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி பகுதியில் சாகுபடி சேதம் மட்டுமின்றி உயிர்பலிகளும் அரங்கேறியுள்ளன. பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலுார், பன்றிமலை, சோலைக்காடு பகுதியில், வாழை, பலா,
அரியமலை, யானைக்கூட்டம், வழித்தடங்கள்,

செம்பட்டி-மேற்கு தொடர்ச்சி மலையின் கன்னிவாடி வனபகுதியைச் சேர்ந்த ஆடலுார், பன்றிமலை, பண்ணைப்பட்டி, நீலமலைக்கோட்டை பகுதியில் யானைகள் நடமாட்டம் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இரு ஆண்டுகளாக பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி பகுதியில் சாகுபடி சேதம் மட்டுமின்றி உயிர்பலிகளும் அரங்கேறியுள்ளன. பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலுார், பன்றிமலை, சோலைக்காடு பகுதியில், வாழை, பலா, எலுமிச்சை, மிளகு, காபி, சவ்சவ் சாகுபடி நடக்கிறது. ஆடலுார் அருகே அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதியில் 2 குட்டிகள் உள்பட 8 யானைகள் கொண்ட கூட்டம் 12 நாட்களாக முகாமிட்டுள்ளன. தினமும் நுாற்றுக்கணக்கான வாழை, சவ்சவ், அவரை பந்தல் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துகின்றன. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை பெயரளவுக்கே நடக்கிறது.


தவிக்கும் யானைக்கூட்டம்


யானைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பின்னடைவு தொடர்கிறது. வழக்கமாக யானைகள் வழித்தடங்களை மறிப்பதும், மறைப்பதுமான நடவடிக்கைகளே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன.யானைகள் ஒரு நாளைக்கு 30 கி.மீ., துாரம் செல்லக்கூடியவை. ஆனால் இங்கு முகாமிட்டுள்ள யானைகள் 12 நாட்களாக மறைவிடங்களில் பதுங்கி, இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இப்பகுதியில் போதிய உணவு இல்லாதபோதும், வனப்பகுதிக்குள் செல்லாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறுகின்றனர். யானைகளின் வழித்தடங்களில் வினோத சப்தம், இயந்திர பயன்பாடு, பட்டா நிலங்களில் வெடி வைத்தல், பாறைப்பகுதிகளில் வெடி பயன்பாடு போன்ற தடைகள் காரணமாக இருக்கலாம். இதனை கண்டறிந்து நிரந்தர தீர்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கொடைக்கானல் மாவட்ட வன அலுவலரே திண்டுக்கல் வனப்பகுதியையும் கூடுதலாக கவனிப்பதும் காரணம் என்ற புகாரும் உள்ளது.


என்னதான் தீர்வு


திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பணியிடத்தை நிரப்புவதுடன், துரித நடவடிக்கையாக யானைகளை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். யானை நடமாட்டம் கண்காணிப்பு, கணக்கெடுப்பு பணிகளில் குறைந்தளவு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மிளகு, பிறமரங்களில் இலைகளை குவித்து, மரக்கட்டைகளை அடுக்கி, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் புகை எழுப்ப வேண்டும். மாலை 4:00 மணிக்கு முன்பே புகை எழுப்பினால் மட்டுமே இவை வராமல் தடுக்க முடியும்.அரியமலையில் இருந்து காந்திபுரம் பகுதிகளில் யானை இறங்கிய பின் புகை எழுப்புவதால் பலன் இல்லை. அவை அடுத்த பட்டா நிலங்களின் வழியே உள்ளே நுழைந்து சேதத்தை அதிகப்படுத்தும். இதற்கு கூடுதல் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். பிற பகுதிகளில் இருந்து வனத்துறை ஊழியர்கள் அல்லது சிறப்பு குழுவை வரவழைத்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும்.


நிவாரணம் வரவில்லை


latest tamil news


ஆர்.பூபதி, ஆடலுார்: யானைகளால் ஏற்படும் வழித்தடத்தில், காட்டு மாடுகளும் புகுந்து மலைவாழை, சவுக்கு, காபி நாற்றுகளை சேதப்படுத்துகின்றன. இரு ஆண்டுகளாக நிவாரணம் வரவில்லை. ஆனால் யானைகள் 7 முறை வந்து சேதப்படுத்தியுள்ளன. மலைக்கிராம விவசாயிகளின் உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பு இல்லை.


தடைபட்ட யானைகள் வழித்தடம்


எஸ்.சக்திவேல், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கம்: விவசாய பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். பலர் சாகுபடி பணிகளை நிறுத்தியுள்ளதால் வேலைவாய்ப்பு பாதிக்கிறது. வனத்துறையினரின் நடவடிக்கைகளில் பெரும் தொய்வு நிலவுகிறது. விதிமீறல் நடவடிக்கைகளால் யானைகளின் வழித்தடம் தடைபட்டுள்ளது. ஏராளமான மண் அள்ளும் இயந்திரங்கள் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.


விரட்டும் பணியில் வனக்குழு


கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல்: அரியமலை, பண்ணைப்பட்டி, சிறுவாட்டுக்காடு என்ற வழித்தடம் சீசனுக்கேற்ப யானைகளின் பாதையாக உள்ளது. தற்போது 7 பேர் கொண்ட வனக்குழுவினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலா சீசன் என்பதால் கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னடைவு நீடிக்கிறது. பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட முடியாது. விரைவில் அவை பண்ணைப்பட்டி பகுதிக்கு கடந்து செல்லும். இருப்பினும் அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
17-ஜூலை-202118:10:17 IST Report Abuse
sridhar காடுகளை அழித்து காருண்யமே இல்லாமல் கல்லூரி கட்டப்படுகிறது .தேவையா
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-ஜூலை-202115:35:12 IST Report Abuse
mindum vasantham மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை பாதுகாத்தால் மட்டுமே தென்னிந்திய நீராதாரம் பாதுகாக்கப்படும் நதிகள் இணைப்பு இல்லை
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-202111:58:42 IST Report Abuse
vpurushothaman மிருகங்கள் குடியிருப்பில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு. இப்படி நடக்கத்தான செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X