ஸ்டேன் சாமி இறப்பு மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை: ஐ.நா., அறிக்கை

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
ஜெனிவா: எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சாமி, 84, ஜூலை 5ம் தேதி உயிரிழந்தார்.இதுகுறித்து ஐ.நா., சிறப்பு செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:ஆதாரங்களின் அடிப்படை இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, உடனடியாக விடுதலை செய்ய

ஜெனிவா: எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சாமி, 84, ஜூலை 5ம் தேதி உயிரிழந்தார்.இதுகுறித்து ஐ.நா., சிறப்பு செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



ஆதாரங்களின் அடிப்படை இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஸ்டேன் சாமியின் இறப்பு நமக்கு உணர்த்துகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை.

மனித உரிமைகள் ஆர்வலரான அவரை தீவிரவாதி போல் நடத்தியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டு பலியான ஸ்டேன் சாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ஸ்டேன் சாமியின் இறப்பால் சர்வதேச அளவில் இந்தியா மீது வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களை மறுத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், 'சட்டத்தை மீறி செயல்பட்டதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமைகள் நிலைநாட்டியதற்கு எதிராக அல்ல' என, விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஜூலை-202114:52:52 IST Report Abuse
bal ஒன்னு ஸ்டான்னு வை இல்லேன்னா ஸ்வாமின்னு வை..அதென்ன ஸ்டான் ஸ்வாமி...எவ்வளவு பணம் மிஸ்ஸிஒன்கிட்ட இருந்து பணம் வங்கியிருப்பர்... மதம் மாற்றம் பண்ண...இந்த ஐநா சீனாவின் கைக்கூலி.
Rate this:
Cancel
18-ஜூலை-202112:13:56 IST Report Abuse
kulandhai Kannan தமிழ்நாட்டிலிருந்து பீகார் சென்றது மதமாற்றம் செய்வதற்குத்தானே ஒழிய, மக்கள் சேவை என்பதெல்லாம் கடைந்தெடுத்த மாய்மாலம்.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
18-ஜூலை-202109:30:21 IST Report Abuse
vivek c mani இவங்க விடற அறிக்கையை பார்த்தால் தாலிபான்களும் மனித உரிமைக்காக உலகெங்கும் போராடுகிறார்கள் என மற்றொரு அறிக்கையை விடுவார்கள் போலிருக்கிறது. ஐ நா மனித நன்மைக்காக பேச வேண்டும், மத நன்மைக்காக அல்ல. தவறு செய்தவர்கள் தவற்றினை மத பேதமின்றி கண்டிக்க வேண்டும். இல்லையெனில் ஐ நா உலக பொதுச்சபை எனும் பெயரிழந்து கிறிஸ்துவ மத சபை எனும் பெயர் இடும் நிலைக்கு தள்ள படும். ஐ நா வின் கூற்று இந்தியா நாட்டின் நீதி மன்றங்களின் மாண்பை அவமதிப்பதாக உள்ளது. நீதி மன்றங்கள் சரியான ஆதாரங்கள், சாட்சியங்கள் , மற்றும் நிகழ்வுகளின், பேரில் நீதியை நிலை நாட்டுபவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X