சம்பவம் செய்தி

தமிழ்நாடு

19 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது

Updated : ஜூலை 17, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் அருகே, 19 மயில்கள் பலியான சம்பவத்தில், விவசாயி ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி, வலசுபாளையம் நாச்சியார் தோட்டம் பகுதியில், மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் பழனிசாமி, 65 என்பவரின் தோட்டத்தில், 19 மயில்கள்
மயில், விஷம், விவசாயி, கைது

பல்லடம்: பல்லடம் அருகே, 19 மயில்கள் பலியான சம்பவத்தில், விவசாயி ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி, வலசுபாளையம் நாச்சியார் தோட்டம் பகுதியில், மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் பழனிசாமி, 65 என்பவரின் தோட்டத்தில், 19 மயில்கள் இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். மயில்கள் விஷம் வைத்துதான் கொல்லப்பட்டது என்பதை, உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், கணபதிபாளையம் கால்நடை மருத்துவர்அறிவுசெல்வன் உறுதி செய்தார்.உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், கணபதிபாளையம் கால்நடை மருத்துவர் அறிவுசெல்வன் உறுதி செய்தார்.


latest tamil news


வன அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், 'பழனிசாமி, தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பாத்திகள் செய்துள்ளார். வழக்கமாக தோட்டத்துக்கு வரும் மயில்கள், பாத்திகளை சேதப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக, கோபமடைந்த பழனிசாமி, அரிசியுடன் நுவாக்ரான் மருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட, 12 பெண், மற்றும் 7 ஆண் மயில்கள் என, மொத்தம், 19 மயில்களும் உயிரிழந்தன. உடற்கூறு மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பழனிசாமியை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றார்.

ஓரிரு தினங்களுக்கு முன், திருப்பூர் அருகே முத்தனம்பாளையத்தில், 24 மயில்கள் இறந்தன. அதன் தாக்கம் - குறையும்முன், 19 மயில்கள் உயிரிழந்தது பல்லடம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சரணாலயம் அமையுமா?



திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மயில்கள், காட்டுப் பகுதிகள், மற்றும் விளை நிலங்கள் அருகிலும் வசிக்கின்றன. உணவு தேடி அவ்வப்போது நகர பகுதிகளுக்கும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், தானியங்களை தேடி விளை நிலங்களுக்கு வரும்போது, இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழ்கின்றன. நமது நாட்டின் தேசிய பறவையான மயில்களை காக்க தமிழக அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க, திருப்பூர் மாவட்டத்தில் மயில்களின் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Mohan - Indore,இந்தியா
23-ஜூலை-202108:06:31 IST Report Abuse
K Mohan மனிதர்களிடம் இருந்து மயில்களையும், மயில்களிடம் இருந்து விளைநிலங்களையும் காக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-ஜூலை-202111:02:34 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy விவசாய பொருள்களை அதிக அளவில் சேதப்படுத்துவது மயில்கள். அதற்க்காக கொலை செய்வது கூடாது என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும். நான் மீன் வலை வாங்கி போட்டேன். அதனுள் சென்று விடுகிறது. நான் விரட்டுவதும் இல்லை மயில் என்னை பார்த்து ஓடுவதும் இல்லை. சுற்றிலும் காடு மயில்கள் அனைத்தும் என் தோட்டத்தில். ஆடு மாடுகளோடு மயிலும் வாழட்டும். கம்பு பயிரிடுங்கள் சிட்டு குருவியும் வந்து வாழும்
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
19-ஜூலை-202110:15:37 IST Report Abuse
Ram விலை பொருட்களை அளித்தால் என்னசெய்வது என்று அரசு சொல்லவேண்டும் .... அதைவிடுத்து கைது தேவையில்லாதது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X