சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்லதே நடக்கும்!

Added : ஜூலை 17, 2021
Share
Advertisement
நல்லதே நடக்கும்!'அரசியலில் நுாற்றாண்டு கண்ட கட்சிக்கு இந்த நிலையா...' என, காங்கிரசைப் பற்றி உண்மையான பரிதாபத்துடன் கூறுகின்றனர் டில்லி அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்; சோனியா இடைக்கால தலைவராக நீடிக்கிறார். 'கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்' என, மூத்த

அக்கம் பக்கம்


நல்லதே நடக்கும்!



'அரசியலில் நுாற்றாண்டு கண்ட கட்சிக்கு இந்த நிலையா...' என, காங்கிரசைப் பற்றி உண்மையான பரிதாபத்துடன் கூறுகின்றனர் டில்லி அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்; சோனியா இடைக்கால தலைவராக நீடிக்கிறார். 'கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்' என, மூத்த தலைவர்கள் தொடர்ந்து போர்க்கொடி துாக்கி வருகின்றனர். காங்கிரஸ் மேலிடம் இதையெல்லாம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த, ஒரு சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்த சூழ்நிலையில் தான், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான முக்கிய பொறுப்பில் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட உள்ளதாக டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது; இது, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சிக்கு தலைமையேற்று நடத்த, விசுவாசம் மிக்க தலைவர்கள் யாரும் இல்லையா... கட்சிக்கு தொடர்பு இல்லாதவரையா முக்கிய பொறுப்பில் நியமிப்பது' என, முணுமுணுப்பு எழுந்துள்ளது.காங்., மூத்த தலைவர்களிடம் இது குறித்து கேட்டால், 'கற்பனை, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்' என்கின்றனர்.




ஒளிமயமான எதிர்காலம்!



'இப்போது தான் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கியுள்ளார்; இனி நல்லதே நடக்கும்' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான மீனாட்சி லேகியின் ஆதரவாளர்கள். தலைநகர் டில்லியில் பா.ஜ., வின் அடையாளமாக திகழ்பவர் மீனாட்சி. டில்லியில் ஹர்ஷ்வர்தன், மனோஜ் திவாரி போன்ற மூத்த தலைவர்கள் பா.ஜ., வில் இடம் பெற்றிருந்தாலும், மீனாட்சி லேகி, இவர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். மிகச் சிறந்த பேச்சாளர்; பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அசராமல் பதிலடி கொடுப்பவர். பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு அமைந்தபோதும், அமைச்சரவை பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதாக பேசப்பட்டது; அப்போதும் கிடைக்கவில்லை.
இதனால் மனதுக்குள் சோகம் இருந்தாலும், அதை வெளியில் காட்டாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்து வந்தார் மீனாட்சி.இவரது மிகச் சிறந்த பலமே, தனக்கென கோஷ்டி எதையும் அமைக்காதது தான். இதற்கு சரியான நேரத்தில் அவருக்கு பரிசு கிடைத்துள்ளது. சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், வெளியுறவு மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பு மீனாட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமாக பணியை துவக்கியுள்ளார் அவர்.
மத்திய அமைச்சரானதுமே, அவரைச் சுற்றி ஒரு ஆதரவுக் கூட்டம் உருவாகி உள்ளது. 'இந்த ஆதரவுக் கூட்டத்தை, ஜால்ரா கூட்டமாக மாற்றாமல் இருந்தால், மீனாட்சி லேகிக்கு அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X