நிலுவையில் 4.5 கோடி வழக்குகள் ; தீர்வு காண தலைமை நீதிபதி யோசனை

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 17, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி : ''நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கணக்குகள் கூறுகின்றன. சமரசம், மத்தியஸ்தம் செய்வது போன்ற மாற்று நீதி வழிகளை பின்பற்றினால், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க முடியும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.இந்தியா மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூர் நீதித் துறையினர் பங்கேற்ற மத்தியஸ்த மாநாடு
கோர்ட், நிலுவை, வழக்குகள் 4.5 கோடி  தீர்வு, நீதிபதி யோசனை

புதுடில்லி : ''நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கணக்குகள் கூறுகின்றன. சமரசம், மத்தியஸ்தம் செய்வது போன்ற மாற்று நீதி வழிகளை பின்பற்றினால், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க முடியும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூர் நீதித் துறையினர் பங்கேற்ற மத்தியஸ்த மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.இதில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கணக்குகள் கூறுகின்றன. இது எந்த அளவுக்கு முறையான தகவல் என்பது தெரியவில்லை.பிரச்னைகளுக்கு தீர்வுஆனால் வழக்குகளை நீதித் துறை சரியாக எதிர்கொள்ளாததையே காரணமாக கூறுகின்றனர். நீதிமன்றங்களின் திறமையை குறைத்தும் மதிப்பிடுகின்றனர்.நேற்று ஒருவர் வழக்கு தொடர்ந்தால், அதுவும் நிலுவை வழக்காகவே கருதப்படுகிறது. அதனால் இந்தக் கணக்கு சற்று மிகப்படுத்தப்பட்ட, முறையான ஆய்வு செய்யப்படாததாகவே உள்ளது. வழக்குகள் தொடர்வதை தங்களின் சொகுசாக கருதி சிலர் வழக்கு தொடர்கின்றனர். இது போன்றவையும், நிலுவை வழக்குகள் அதிகரிக்க காரணம். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதில் சமரசம் செய்வது, மத்தியஸ்தம் செய்வது என்பது, நம் நாட்டின் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் அல்லது மதத் தலைவர்கள் தலைமையில் பல சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.


எந்த ஒரு சமூகத்திலும் அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார, மத ரீதியில் பிரச்னைகள், முரண்பாடுகள் இருக்கவே செய்யும். ஆனால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல வழிகள் உள்ளன.ஹிந்து மதத்தின் இதிகாசமான மஹாபாரதத்தை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். கவுரவர்கள் மற்றும் பாண்டர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டபோது ஹிந்துக் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மத்தியஸ்தம் செய்தார். அதை கவுரவர்கள் ஏற்காததால் போர் ஏற்பட்டது. அந்த மத்தியஸ்தத்தை ஏற்றிருந்தால் போர் ஏற்பட்டிருக்காது.கடந்த 1775ம் ஆண்டில் பிரிட்டிஷ் நீதி முறை வந்தபின், நம் நாட்டில் பழக்கத்தில் இருந்த இந்த சமரசம், மத்தியஸ்தம் ஆகியவை மறக்கடிக்கப்பட்டுள்ளன. பல மாறுதல்கள், திருத்தங்களுடன், பிரிட்டிஷ் நீதி முறையையே தற்போது பயன்படுத்தி வருகிறோம்.நம் நாட்டில் மாற்று தீர்வு முறைகள் வாயிலாக நீதி விசாரணை காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


மாற்று வழிமுறைகுறைதீர் ஆணையங்கள், சர்ச்சை தீர்வு மையங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். நம் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர், இது போன்ற மாற்று நீதி சேவை அமைப்புகளை அணுக வாய்ப்புள்ளது.கடந்த 2005ல் இருந்து நாடு முழுதும் 43 ஆயிரம், மத்தியஸ்தம் செய்யக் கூடிய சர்ச்சை தீர்வு மையங்களை உருவாக்கிஉள்ளோம். அதில் 32 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகளவில் நிலுவையில் இருப்பதை தவிர்க்க, இதுபோன்ற மாற்று வழிமுறைகளை பயன்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


ஆதாரம் இருக்கா?நீதிமன்ற நடைமுறைகள் குறித்து, தலைமை நீதிபதி என்.வி. ரமணா நகைச்சுவையுடன் குறிப்பிட்டதாவது:நம் நீதிமன்ற நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நீதி விசாரணையை தாமதப்படுத்துகின்றன என்பதற்கு, ஒரு நகைச்சுவையை குறிப்பிடுவர். ஒரு நீதிபதி, தன் வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய பேத்தி, 'தாத்தா, அக்கா என் பொம்மையை பிடுங்கி விட்டாள்' என்கிறார். அதற்கு அந்த நீதிபதி, 'ஆதாரம் இருக்கா' என, கேட்கிறார். இது தான் நீதிமன்ற விசாரணையில் உள்ள பிரச்னைகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
18-ஜூலை-202117:17:04 IST Report Abuse
Balasubramanian மாவட்ட ரீதியாக, மக்கள் பிரதிநிதிகள், மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் அமைத்து, பண நஷ்டம் (பல செக் திரும்ப வந்தவை, நிலுவை வசூல், நில சம்பந்தப்பட்ட வியாஜ்ய விவகாரம்)தொடர்பானது என்றால், அதற்கு குறிப்பிட்ட அளவுகோல் வைத்து, சமரசம், மத்தியஸ்தம் மூலம் பாதிக்கு (50%) மேற்பட்ட வழக்குகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.குற்றவியல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
18-ஜூலை-202116:55:51 IST Report Abuse
J. G. Muthuraj வழக்கறிஞர்களுக்கு கொரோனா காலத்தில் வருமான வாய்புக்கள் குறைவே என்று சொன்னீர்களே, MY LORD அவர்களுக்கு நிவாரணத்தொகை அரசாங்கத்திலிருந்து கிடைக்க சமீபத்தில் வலியுறுத்தினீர்களே.....இத்தனை காலம் காத்திருந்து இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிற மனுதாரருக்கு அதிலும் ஏழை மனுதாரருக்கு தான் நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்......
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூலை-202113:58:35 IST Report Abuse
bal எந்த வக்கீல் சமரசம் பேசுவான்...நிறைய பேர்களுக்கு பொய்யும் பணமும் தான் முக்கியம்..என்ன இதுதான் பிரதான தொழில் அதன் மூலம் பங்களா கார் அரசியல் பதவி எல்லாம் கிடைக்கும்..யார் உண்மைக்கு வாதிடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X