நகைக்காக மூதாட்டி கொலை மருமகன் உட்பட 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்காக மூதாட்டி கொலை மருமகன் உட்பட 4 பேர் கைது

Added : ஜூலை 17, 2021
Share
திருநெல்வேலி:நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மருமகன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் செண்பகராமநல்லுார் அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் வடிவம்மாள், 65. இவரது மகன் திருமலைநம்பி; இரு மகள்கள் பரமேஸ்வரி, 33, வேலம்மாள், 31, ஆகியோர் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கடந்த 13ல் வடிவம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இயற்கை மரணமாக இருக்கலாம் என இறுதி

திருநெல்வேலி:நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மருமகன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் செண்பகராமநல்லுார் அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் வடிவம்மாள், 65. இவரது மகன் திருமலைநம்பி; இரு மகள்கள் பரமேஸ்வரி, 33, வேலம்மாள், 31, ஆகியோர் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கடந்த 13ல் வடிவம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இயற்கை மரணமாக இருக்கலாம் என இறுதி சடங்குகள் செய்தனர்.

நேற்று முன்தினம், அவரது நகைகளை சரிபார்த்த போது 13 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. சம்பவத்தன்று மகள் பரமேஸ்வரியின் கணவர் கல்லத்தியான், சிலருடன் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது முரணாக பேசினார். மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.விசாரணையில், கல்லத்தியான், 37, நண்பர்கள் இசக்கிராஜா, 26, மூர்த்தி 29, அந்தோணி, 32, ஆகியோர் சேர்ந்து வடிவம்மாளின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து நகைகளை பறித்துச்சென்றது தெரிந்தது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X