சம்பவம் செய்தி

தமிழ்நாடு

67 ஆண்டுகள் பழமையான பழங்குடியினர் பள்ளி மூடல்

Added : ஜூலை 18, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை நாகம்பள்ளியில், பழங்குடியினர் கல்விக்கு அடித்தளமாக இருந்த, 67 ஆண்டுகள் பழமையான பள்ளி மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை ஊராட்சியில் வசித்துவரும் பழங்குடி மக்கள் கல்வி கற்பதற்காக, 1954ம் ஆண்டு முதல், நாகம்பள்ளியில் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது.இங்குள்ள வனப்பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வந்த, 701 குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்க,
 67 ஆண்டுகள் பழமையான பழங்குடியினர் பள்ளி மூடல்

கூடலுார்:முதுமலை நாகம்பள்ளியில், பழங்குடியினர் கல்விக்கு அடித்தளமாக இருந்த, 67 ஆண்டுகள் பழமையான பள்ளி மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை ஊராட்சியில் வசித்துவரும் பழங்குடி மக்கள் கல்வி கற்பதற்காக, 1954ம் ஆண்டு முதல், நாகம்பள்ளியில் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது.இங்குள்ள வனப்பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வந்த, 701 குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மக்களை வெளியேற்றி, மாற்றிடம் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இதுவரை, 490 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள மக்களையும் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டதால், மாணவர்கள் வருகை இன்றி நாகம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் மற்றும் ஆறு மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.

முன்னாள் மாணவர்கள் கூறுகையில், '67 ஆண்டுகளாக பழங்குடியினர் கல்விக்கு அடித்தளமாக இருந்த இப்பள்ளியை, நிரந்தரமாக மூடுவதை தவிர்த்து, வன பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மையமாக மாற்ற வேண்டும். 'இங்கு, வனம் குறித்த கல்வியை போதிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X