சேலம்:சேலம் மத்திய சிறையில் இருவரை கொல்ல முயற்சி நடந்ததாக வாட்ஸ்ஆப் தகவலால் தீவிர விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து வக்கீல்கள் குழுவின் வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் தகவல்:சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் மணி ராஜாவை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. சிறைக்குள் உள்ள சென்னை விழுப்புரம் சேலம் ரவுடிகள் சேர்ந்து அந்த இருவருக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலந்துள்ளனர். சாப்பிட்ட அவர்கள் ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.
சிகிச்சை மூலம் சிறை நிர்வாகம் காப்பாற்றிவிட்டது.பின் ஜாமினில் வெளிவந்த மணி தொடர் சிகிச்சையில் உள்ளார். சிறைக்குள் ராஜாவுக்கு ஆபத்தான நிலை உள்ளது. அதனால் தமிழக அரசு போலீஸ் டி.ஜி.பி. சிறைத்துறை டி.ஜி.பி. உள்ளிட்டோர் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். வக்கீல் பொன்.முருகேசன் திருச்சி.இவ்வாறு 10 நாளாக பரவி வருகிறது.
இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் மதிவாணன் சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் 'வாட்ஸ்ஆப்பில் பரவும் பொய் தகவல் சிறை நிர்வாகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறைக்குள் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதால் தகவல் பரப்புவோர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE