அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட கட்சிகளை திகைக்க வைத்த பா.ஜ.,

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும் அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களும் தி.மு.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகளை திகைக்க வைத்துள்ளன.தமிழக பா.ஜ. தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையை அக்கட்சியின் தேசிய தலைமை நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் பா.ஜ.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும்
 திராவிட கட்சிகளை திகைக்க வைத்த பா.ஜ.,

சென்னை:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் கொடுத்த வரவேற்பும் அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களும் தி.மு.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகளை திகைக்க வைத்துள்ளன.

தமிழக பா.ஜ. தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையை அக்கட்சியின் தேசிய தலைமை நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் பா.ஜ.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களில் அண்ணாமலையே மிகவும் இளையவர். தலைவர் பொறுப்பேற்க அண்ணாமாலை கோவையில் இருந்து 14ம் தேதி காலை கிளம்பினார். வழிநெடுக ஒவ்வொரு நகரின் எல்லையிலும் திரளாக கூடிய கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பூக்களை துாவி 'கட் அவுட்' வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றபடி சென்னை வந்த அண்ணாமலை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ. தலைவராக பொறுப்பேற்றார்.அவரை வரவேற்று சென்னையில் அண்ணா சாலை காமராஜர் சாலை என அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அண்ணாமலை படங்கள் அச்சிடப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்களை பா.ஜ.வினர் ஒட்டினர்.

கமலாலயம் அமைந்துள்ள சாலையில் வாழை மரம் தோரணம் கட்டி மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.தி.மு.க. - அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின்போது ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிப்பது போன்று பா.ஜ.வினர் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர். அண்ணாமலைக்கு கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் போஸ்டர்கள் திராவிட கட்சியினரை திகைக்க வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Pondicherry,இந்தியா
19-ஜூலை-202105:47:23 IST Report Abuse
Venkat சாயிராம் பிஜேபி என்பது நேர்மையான கட்சி, குடும்ப வாரிசு இல்லாத கட்சி, எல்லா மதங்களும், எல்லா இன்னங்களும் ஒன்று என்கின்ற சித்தாந்ததை உறுதியாக பின்பற்றும் கட்சி. தற்போது, அராஜகம், அடாவடி, ஊழல், குடும்ப வாரிசு, உண்மையான மதசார்ப்பு இல்லாமல் மாத பாகுபாடு அரசியல் செய்வது என உள்ள கட்சிக்கு மாற்றாக உள்ளதுதான் அகில இந்திய கட்சியான எங்கள் பிஜேபி கட்சி. மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை ஐயா அவர்கள் சொன்னது போலவே, தமிழகம் முழுவதும் எல்லா நகர, எல்லா கிராம மக்கள் அனைவரையும் சந்தித்து, தற்போது நம் பிஜேபி மத்திய அரசால் அனைத்து இந்தியர்களும் பெரும் பயன்களை விளக்கி சொன்னால் போதும், பொதுமக்களின் தெளிவான ஆதரவு கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மீண்டும் 3வது முறையாக இன்னும் அதிக மெஜாரிடியோடு பிஜேபி மத்தியில் ஆளவுள்ளதோ, அதைப்போலவே நம் தமிழகத்திலும் பிஜேபி முழு மெஜாரிடியோடு தமிழகத்திலும் நம் பிஜேபி ஆட்சி அமைவது திண்ணம். ஜெய்ஹிந்த். சாயிராம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-202123:34:11 IST Report Abuse
J.V. Iyer அண்ணாமலைஜிதான் அடுத்த தமிழக முதல்வர்.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18-ஜூலை-202120:23:24 IST Report Abuse
Mirthika Sathiamoorthi ..ஒரு தேசிய கட்சி..நாளைக்கு கட்சிசார்ப தேர்தலில் நிக்கப்போறாங்களா அவங்களை தீர்மானிக்கும் மாநில தலைவரை ஐஸ் வைக்க என்னென்ன பண்ணுவானுக? இதோ உள்ளாட்சி தேர்தல் வரப்போவுது..BJP சார்ப யாருக்கு சீட்டு? இப்பவே ஜால்ரா போட்டாத்தானே நாளைக்கு ஏதாவது கிடைக்கும்..இது லோக்கல் கவுன்சிலர் முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X