பாக்.,கில் ஆப்கன் துாதர் மகளை கடத்தி சித்ரவதை செய்த மர்ம நபர்கள்

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கன் துாதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பல மணி நேர சித்ரவதைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றுபவர் நஜிபுல்லா அலிகில். இஸ்லாமாபாதில் வசிக்கும் இவரது மகள் சில்சிலா அலிகில் நேற்று முன் தினம் வெளியே சென்று வீடு திரும்பும் நிலையில் மர்ம நபர்களால்
பாக்.,கில் ஆப்கன் துாதர் மகளை கடத்தி சித்ரவதை செய்த மர்ம நபர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கன் துாதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பல மணி நேர சித்ரவதைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றுபவர் நஜிபுல்லா அலிகில். இஸ்லாமாபாதில் வசிக்கும் இவரது மகள் சில்சிலா அலிகில் நேற்று முன் தினம் வெளியே சென்று வீடு திரும்பும் நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவர்கள், சில்சிலாவை பல மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சித்ரவதை செய்தபின் விடுவித்துள்ளனர்.


latest tamil news



இந்த கடத்தல் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் 'பாக்.,கில் உள்ள துாதரக அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க பாக்., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-ஜூலை-202109:49:56 IST Report Abuse
madhavan rajan பாக்கிஸ்தான் எங்கு ஆட்சிக்கு எதிராக தீவிரவாதிகள் இருந்தாலும் ஆதரிப்பார்கள். தாலிபான்களை ஆதரிப்பதால் அவர்கள் ஆப்கானுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையையும் ஆதரிப்பார்கள்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-202110:08:59 IST Report Abuse
Paraman இதுக்கெல்லாம் ஒரே வழி, ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் இந்தியாவோடு இணைவது தான். இந்தியாவிற்கு அது கொஞ்சம் செலவு பிடித்தாலும் ஏராளமான இயற்கை வளங்களும், அணைத்து சூப்பர் பவர்களின் மூலோபாய இடமாகவும் இது வரை மெய்படாத கனவாகவும் இருக்கும் ஒரு பிரதேசம். இந்தியாவின் கட்டுப்பாட்டில் அது வந்தால், சற்று சிரமத்தோடு அதை சரிசெய்தால், அது சீனா,அமெரிக்கா,பாகிஸ்தான், இங்கிலாந்து என பல இந்திய வெறுப்பு நாடுகளுக்கு ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்தது போன்ற வெற்றியை தரும் முக்கியமாக நமது பிராதன எதிரிகள் சீனா, பாகிஸ்தானுக்கு அது மிக பெரிய அடியாகும். உள்நாட்டு சீன, பக்கி தரகனுகளுக்கும் மிக பெரிய ஆபத்தாகும். தாலிபான்களை இந்தியா இரும்பு கரம் கொண்டு விரைவில் எளிதில் அடக்க முடியும், இந்திய நட்பு நாடுகளான இஸ்ரேல் இரான், ரசியா, ஜோர்டான் உதவியோடு பெரும்பாலான ஆப்கானிஸ்தானியர்கள் சூபி வழி வந்த தன்மையான, அறிவில் சிறந்த மார்க்க வழியை பின்பற்றுபவர்கள்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
18-ஜூலை-202109:38:22 IST Report Abuse
J. G. Muthuraj மனிதாபமில்லாத பிசாசின் மாக்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X