பாக்.,கில் ஆப்கன் துாதர் மகளை கடத்தி சித்ரவதை செய்த மர்ம நபர்கள்| Dinamalar

பாக்.,கில் ஆப்கன் துாதர் மகளை கடத்தி சித்ரவதை செய்த மர்ம நபர்கள்

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (3)
Share
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கன் துாதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பல மணி நேர சித்ரவதைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றுபவர் நஜிபுல்லா அலிகில். இஸ்லாமாபாதில் வசிக்கும் இவரது மகள் சில்சிலா அலிகில் நேற்று முன் தினம் வெளியே சென்று வீடு திரும்பும் நிலையில் மர்ம நபர்களால்
பாக்.,கில் ஆப்கன் துாதர் மகளை கடத்தி சித்ரவதை செய்த மர்ம நபர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆப்கன் துாதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பல மணி நேர சித்ரவதைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றுபவர் நஜிபுல்லா அலிகில். இஸ்லாமாபாதில் வசிக்கும் இவரது மகள் சில்சிலா அலிகில் நேற்று முன் தினம் வெளியே சென்று வீடு திரும்பும் நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவர்கள், சில்சிலாவை பல மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சித்ரவதை செய்தபின் விடுவித்துள்ளனர்.


latest tamil news



இந்த கடத்தல் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் 'பாக்.,கில் உள்ள துாதரக அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க பாக்., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X