'பிரீபெய்டு மின் மீட்டர்' அரசு ஆபீஸ்களுக்கு வருமா?

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை : மின் கட்டணம் செலுத்த அலட்சியம் காட்டும் அரசு அலுவலகங்களில் பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கும், 'பிரீபெய்டு மீட்டர்' பொருத்துவதற்கான ஆய்வை முடித்தும், மின் வாரியம் அதை செயல்படுத்தாமல் தாமதம் செய்கிறது.உள்ளாட்சி குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் குறித்த காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால் அரசு துறைகளில்

சென்னை : மின் கட்டணம் செலுத்த அலட்சியம் காட்டும் அரசு அலுவலகங்களில் பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கும், 'பிரீபெய்டு மீட்டர்' பொருத்துவதற்கான ஆய்வை முடித்தும், மின் வாரியம் அதை செயல்படுத்தாமல் தாமதம் செய்கிறது.latest tamil newsஉள்ளாட்சி குடிநீர் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் குறித்த காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால் அரசு துறைகளில் உடனுக்குடன் மின் கட்டணத்தை வசூலிக்க பிரீபெய்டு மீட்டர் பொருத்துமாறு மாநில மின் வாரியங்களை மத்திய, அரசு அறிவுறுத்தியது. இந்த மீட்டரில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப மின்சாரம் வினியோகிக்கும் வகையில் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படும். அந்த அளவை தாண்டியதும் தானாகவே மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் மின் வினியோகம் செய்யப்படும்.


latest tamil newsசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பேரூராட்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகங்களில், 2019ல்பிரீபெய்டு மீட்டர் பொருத்தி மின் வாரியம் பரிசோதித்தது. வாரிய அதிகாரிகள் தெலுங்கானா மாநிலம் சென்று பிரீபெய்டு மீட்டர் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது தமிழக அரசின் அனைத்து அரசு துறைகளும் சேர்ந்து 3,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் நிலுவை வைத்து உள்ளன. இருப்பினும் ஏற்கனவே ஆய்வை முடித்துள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் பிரீபெய்டு மீட்டர் பொருத்தாமல் மின் வாரியம் தாமதம் செய்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
18-ஜூலை-202111:43:24 IST Report Abuse
M Selvaraaj Prabu நான் போட்ஸ்வானாவில் வேலை செய்து வருகிறேன். நான் இங்கு வந்ததில் இருந்தே (2000 இல் இருந்து) இங்கு ப்ரீ பெய்டு மீட்டர் தான். இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இந்தியா எவ்வளவு காலம் பின் தங்கி உள்ளது என்பதை. இதற்கு முழு முதற் காரணம் நமது அரசியல் வாதிகள்தான். காங்கிரஸ், தி மு க போன்ற கட்சிகள்தான்.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
18-ஜூலை-202109:38:33 IST Report Abuse
Neutral Umpire அரசு அலுவலகங்களில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதை கட்டாயமாக்க வேண்டும்
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
18-ஜூலை-202109:11:01 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN வரும் ஆகஸ்ட் முதல் அரசு அலுவலகங்களுக்கு இலவச மின்சாரம் கொடுக்க உள்ள சாத்திய கூறுகளை ஆராய வேண்டும். 3000 கோடியை உடனடியாக இந்து அறநிலையத்துறை கஜனாவிலிருந்து எடுத்து செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X