இன்றும், நாளையும் விடாது மழை!

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : 'தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால், 11 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவிப்பு : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார்,

சென்னை : 'தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால், 11 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவிப்பு : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.


latest tamil news



சென்னையில் இன்று, சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். நாளை கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில், மிதமான மழையும் பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுராந்தகம் மற்றும் திருத்தணியில், 9; சென்னை கடற்கரை சாலையில், டி.ஜி.பி., அலுவலக பகுதியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. வரும், 21ம் தேதி வங்க கடலின் வடமேற்கு பகுதியில், அதாவது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஜூலை-202108:08:59 IST Report Abuse
duruvasar விடியல் வந்துடுச்சின்னு சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X