பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு கமிஷனுக்கு ஐகோர்ட் யோசனை

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : 'வாக்காளர் பட்டியலை எப்படி சிறப்பாக தயாரிப்பது என்பது குறித்து பார்லிமென்ட் அல்லது தேர்தல் கமிஷன் தான் பரிசீலிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் தாக்கல் செய்த மனுவில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை இரட்டை பதிவுகளை நீக்கும் படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட

சென்னை : 'வாக்காளர் பட்டியலை எப்படி சிறப்பாக தயாரிப்பது என்பது குறித்து பார்லிமென்ட் அல்லது தேர்தல் கமிஷன் தான் பரிசீலிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மதுரையை சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் தாக்கல் செய்த மனுவில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை இரட்டை பதிவுகளை நீக்கும் படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:சட்டசபை தேர்தலுக்கு முன் இந்த வழக்கு தொடரப்பட்டது. இறப்பு சான்றிதழில் ஆதார் விபரங்களை பதிவு செய்யும் போது தேர்தல் கமிஷன் சரிபார்த்து கொள்ள முடியும் என மனுதாரர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.


latest tamil news



வாக்காளர் பட்டியலை எப்படி சிறப்பாக தயாரிப்பது; அதன் புனிதம் துாய்மையை உறுதி செய்வது குறித்து பார்லிமென்ட் அல்லது தேர்தல் கமிஷன் தான் பரிசீலிக்க வேண்டும். உயிரோடு இருப்பவர் தான் வாக்களிக்க முடியும் என்பதையும் அவர்களின் பெயர் தான் பட்டியலில் இடம்பெற முடியும் என்பதையும் உறுதி செய்ய மனுதாரரின் பரிந்துரைகளை தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வாக்காளர் பட்டியலில் துாய்மையை பேணுவதற்கு சிறப்பான நடைமுறையை தேர்தல் கமிஷன் தேர்வு செய்யலாம். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
18-ஜூலை-202112:46:32 IST Report Abuse
Ramamurthy N முதலில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும், அப்படி செய்தால் இறந்துபோனவர்களின் ஆதார் மூலம் அவர்கள் பெயரை பட்டியளிலிருந்து நீக்குவது சுலபம்
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-ஜூலை-202112:09:50 IST Report Abuse
Nakkeeran தற்போதைய சூழலில் வாக்காளர் id க்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் ஒரு தொடர்பே இல்லாமல் இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற ஒரு நிலை வந்தாலே போதும் ஓரளவுக்கு குழப்பங்கள் குறையும் .மேலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் என் இணைக்கப்பட வேண்டும் .அப்போதுதான் குற்றங்கள் ஓரளவு குறையும்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைத்தால் அவர் இந்தியாவில் எங்கிருந்தும் ஏன் ராணுவ பராக்சிலிருந்தும் வாக்களிக்க வழி ஏற்படும் ஆதார் எண்ணை உள்ளீடு செய் அவர் தொகுதி வாக்காளர் எண் திரையில் வருகிறது அவர் கை ரேகை பதிந்தால் சரிபார்த்து வேட்பாளர் பட்டியல் தெரிகிறது அவர் வேட்பாளரை தேர்ந்து வாக்கை பதியலாம் அவர் யாருக்கு வாக்களித்தார் என திரையில் தெரிகிறது அவர் ஓகே சொன்னால் வாக்கு கன்பர்ம் ஆகிறது சுமார் அறுபது சதவீதத்துக்கும் மேலானவர்கள் இந்த முறையில் வாக்களித்து விடுவார்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பது குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X