பொது செய்தி

இந்தியா

புதிய கல்வியாண்டு அக்., 1 முதல் துவங்கப்படும் ; யு.ஜி.சி., அறிவிப்பு

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் புதிய கல்வி ஆண்டு, அக்., 1ம் தேதி முதல் துவங்கப்படும்' என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் புதிய கல்வி ஆண்டு அக்., 1ம் தேதி முதல் துவங்கும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள்,

புதுடில்லி : 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் புதிய கல்வி ஆண்டு, அக்., 1ம் தேதி முதல் துவங்கப்படும்' என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.



latest tamil news



யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் புதிய கல்வி ஆண்டு அக்., 1ம் தேதி முதல் துவங்கும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள், செப்., 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி வாரியங்களும் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்பே, இளநிலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகள் துவங்கப்பட வேண்டும்.


latest tamil news



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 31ம் தேதிக்குள் வெளியிடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியாக தாமதமானால், புதிய கல்வி ஆண்டு, அக்., 18ம் தேதி முதல் துவங்கப் படும். மாணவர்களுக்கான வகுப்புகளை 'ஆன்லைன்' வாயிலாகவும் நடத்த லாம் அல்லது மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்தும் நடத்தலாம்.அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளும், தற்போதைய இறுதி ஆண்டு மற்றும் கடைசிக் கால தேர்வுகளை ஆக., 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாகவும் அந்த தேர்வுகளை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
18-ஜூலை-202112:17:47 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN அருமை, தமிழக மாணவர்கள் அரசியல் செய்யும் முட்டாள்கள் பேச்சை செவிசாய்க்காமல் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மாணவர்களைப் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியிலும், படிப்பிலும், வாழ்க்கை முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கல்வியில் அரசியல் செய்யும் திராவிட அரசியல் வாதிகளையும், தமிழக செய்தி ஊடகங்களையும் நம்ப வேண்டாம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-ஜூலை-202108:01:47 IST Report Abuse
duruvasar இந்த முடிவால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படப்போகும் மன உளைச்சலுக்ககு தமிழக தலைவர் மனம் கனத்துவிடும் என்பது வருத்தமாக இருக்கிறது. தமிழகத்திற்க்கு விலக்கு கேட்டு கடிதம் எழுதவேண்டும். 38 எம் பி க்களின் ஒருமித்த குரல் டில்லியில் ஒலிக்க வேண்டும். ஆக . . நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X