பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதலில் பல கோடி முறைகேடு

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால், தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மத்திய அரசின், 'பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல்' திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.இதற்காக விவசாயிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள்,
paddy, நெல், கொள்முதல், முறைகேடு,

சென்னை: நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால், தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசின், 'பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல்' திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.இதற்காக விவசாயிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன. நடப்பு கொள்முதல் சீசன், 2020 அக்., 1ல் துவங்கியது; வரும் செப்டம்பரில் முடிகிறது. இந்த சீசனில், மத்திய அரசு, 100 கிலோ எடை உடைய குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,868 ரூபாயும்; உயர்தர நெல்லுக்கு, 1,888 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிறது. அதனுடன் சேர்த்து தமிழக அரசு, சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாயும்: உயர்தர நெல்லுக்கு, 70 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்குகிறது. விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல், வாணிப கழக கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து அதன், 21 நவீன அரிசி ஆலைகளிலும்; வாணிப கழகத்தில் பதிவு செய்துள்ள, 351 தனியார் முகவர் ஆலைகளிலும், அரிசியாக மாற்றப்படுகிறது.

இதற்காக, கிலோ புழுங்கல் அரிசிக்கு, 20 காசும்; பச்சரிசிக்கு, 10 காசும் கூலியாக வழங்கப்படுகிறது. சில ஆலைகளுக்கு அனுப்பப்படும் நெல், அங்கிருந்து மீண்டும் விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்களிடம் வழங்கப்படுகிறது. அவர்கள் அதை, கொள்முதல் நிலையங்களில் வழங்கி, மீண்டும் குறைந்தபட்ச விலை வாங்குகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு, வாணிப கழக அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.


latest tamil news


இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து, விவசாயி என்பதற்கான ஆவணங்களை பெற்று, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கான பணம், அவர்களின் வங்கி கணக்கில் உடனே செலுத்தப்படுகிறது. சில அதிகாரிகள், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை, அரவை ஆலைகளுக்கு எடுத்து சென்று, அங்கு அரிசியாக மாற்றாமல், மீண்டும் அந்த நெல்லை, தங்களுக்கு வேண்டிய விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்களிடம் வழங்குகின்றனர்.அவர்கள் அதே நெல்லை, மீண்டும் கொள்முதல் நிலையங்களில் வழங்கி, குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுகின்றனர். அவர்கள், தரும் ஆவணங்களையும் சரிபார்ப்பதில்லை. தமிழக அரசு, நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. இதனால், சிலர் மற்ற மாநிலங்களில் இருந்து நெல்லை வாங்கி, வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் வழங்குகின்றனர்.

ரேஷன் கடைகளில், கார்டுதாரர்கள் வாங்காத அரிசியை, விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்கின்றனர். அந்த அரிசியை மொத்தமாக வாங்கும் இடைத்தரகர்கள், தங்களுக்கு வேண்டிய சில அரிசி ஆலைகளில் வழங்குகின்றனர். அவை, ஆலையில் அரவை செய்தது போல, மீண்டும் அந்த அரிசியை வாணிப கழகத்திற்கு சப்ளை செய்கின்றன. இவ்வாறு நெல் கொள்முதலில் துவங்கி, அரிசி வினியோகம் வரை பல ஆண்டுகளாக, பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதுதொடர்பாக, தமிழக அரசு தனிக்குழு அமைத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டால், தவறு செய்த அதிகாரிகள், ஆலைகள், விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்கள் என பலரும் பிடிபடுவர்.கரும்பு விவசாயிகளிடம் இருந்து, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு கொள்முதல் செய்கின்றன. கரும்பு பயிரிடும் முன், எத்தனை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட உள்ளதோ, அந்த நிலம் உள்ளிட்ட விபரங்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். ​

கரும்பு ஆய்வாளர், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்துக்கு சென்று, கரும்பு பயிரிட்டுள்ளார் என்பதை ஆய்வு செய்து, விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, பயிர் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்வார். இதனால், கரும்பு விவசாயி என்பது உறுதி செய்யப்படுகிறது. இதே நடைமுறையை, நெல் விவசாயிகளுக்கும் பின்பற்றினால், நெல் கொள்முதலில் முறைகேடு முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


ரூ.7,330 கோடி பட்டுவாடா!


நடப்பு சீசனில் இதுவரை, 7.15 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 37.66 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய - மாநில அரசுகளின், 7,328 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
18-ஜூலை-202120:03:34 IST Report Abuse
gopalasamy N நெல் கொள்முதல் விவசாயிடம் செய்யப்படுவதில்லை புரோஇக்கரிடம் செய்ய படுகிறது நேரிடையாக அரிசியாக வாங்கினால் அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பு அனால் அரசு செய்யாது
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
18-ஜூலை-202117:09:03 IST Report Abuse
S.Aruna இவ்வாறு நெல் கொள்முதலில் துவங்கி, அரிசி வினியோகம் வரை பல ஆண்டுகளாக, பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளன. இப்பொழுதுதான் நடவடிக்கை எடுக்கப்படுமென்ற நம்பிக்கை வந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புவோம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-ஜூலை-202116:32:59 IST Report Abuse
Darmavan எவ்வளவு ஊழல் இதில் செய்தாலும் திரும்ப ஒட்டு ப்போடும் அறிவிலிகளை என்ன சொல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X