சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையின் தந்தையை நிரூபித்த செம்பியம் 'தைரியலட்சுமி!'

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தன்னையும், தன் குழந்தையையும் ஏமாற்ற முயன்ற நபரை, டி.என்.ஏ., சோதனை மூலம் அம்பலப்படுத்தி, தற்போது, அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, 65 வயது மூதாட்டியின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கொளத்துார் அடுத்த, செம்பியத்தை சேர்ந்தவர் இளவரசி, 65. இவருக்கும், ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகோபாலன் என்பவருக்கும், 1975ல்
குழந்தையின் தந்தையை நிரூபித்த செம்பியம் 'தைரியலட்சுமி!'

சென்னை: தன்னையும், தன் குழந்தையையும் ஏமாற்ற முயன்ற நபரை, டி.என்.ஏ., சோதனை மூலம் அம்பலப்படுத்தி, தற்போது, அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, 65 வயது மூதாட்டியின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொளத்துார் அடுத்த, செம்பியத்தை சேர்ந்தவர் இளவரசி, 65. இவருக்கும், ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகோபாலன் என்பவருக்கும், 1975ல் பெங்களூரில் காதல் திருமணம் நடந்தது. தொடர்ந்து, சென்னையில் ஏழு மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின், வேலைக்கு செல்வதாகக் கூறிய விஜயகோபாலன், மனைவியை பிரிந்து ஐதராபாத் சென்றார். அந்த கால கட்டத்தில் தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், 1985ல் விஜயகோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது, இளவரசிக்கு தெரியவந்தது. இது குறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், இளவரசி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என, விஜயகோபாலன் கூறினார். டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை செய்து நிரூபித்தால், இருவரையும் ஏற்பதாகவும் கூறினார். இதன் அடிப்படையில், 2010ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, டி.என்.ஏ., சோதனை செய்து, விஜயகோபாலன் தான் குழந்தையின் தந்தை என நிரூபிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆணை, 2020ல் பிறப்பிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், இளவரசி, தன்னையும் தன் மகளையும் தவறாக பேசிய விஜயகோபாலன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று முன்தினம் இரவு, போலீசில் புகார் அளித்தார். இது குறித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். தன்னை ஏமாற்றிய கணவனை தண்டிக்க, பல ஆண்டுகளாக போராடி வரும் மூதாட்டியின் தளராத மன உறுதியை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
18-ஜூலை-202114:55:22 IST Report Abuse
Velumani K. Sundaram 65 வயது மூதாட்டியா? 65 வயது நடுத்தர வயதுயா...
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-202113:40:02 IST Report Abuse
Paraman இந்த பெண்மணியின் அவரின் பெண்ணின் பல வருடங்கள் நீடித்த கொடும் மனஉளைச்சல், மற்றும் அவமானங்களுக்கு காரணமான அந்த கிழவன் மட்டுமின்றி இந்த வழக்கில் இத்தனை காலம் எடுத்துக்கொண்ட நீதித்துறையை சேர்ந்தவர்கள், அத்தோடு இந்நாட்டை ஆண்ட, ஆளும் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த பெண்களின் கண்ணீருக்கான பாவத்தின் கூலியை இதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி இதற்க்கு பின்னல் இருக்கும் அமைப்பில் இருப்பவர்களும் தருவார்கள், பல ஜென்மங்களில்
Rate this:
Cancel
Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-202113:38:16 IST Report Abuse
Mani J யாராவது இந்த ஐடியாவ "பாரதி கண்ணம்மா" டைரக்டருக்கு சொல்லித்தாங்களேன்.. ரொம்ப படுத்தறாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X