தமிழகத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tamilnadu, Heavy Rain, Rain, தமிழகம், கனமழை,

சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடமாவட்டங்களில், சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையின் மாநகரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


latest tamil newsவிழுப்புரத்தில் விடிய, விடிய கொட்டிய மழை காரணமாக அனைத்து இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதை நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவிலில் இன்று (ஜூலை 18) காலை முதல் சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தக்கலை பகுதியில் அதிகபட்சமாக 9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டியது.


latest tamil newsபோடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. போடி நகர் பகுதி, கிராமங்கள், போடிமெட்டு, குரங்கணி-கொட்டகுடி ஆகிய மலை கிராமங்களிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.


வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரமானதால் நள்ளிரவு மற்றும் அதிகாலை வரை அதிக குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர் மின்சக்தி மற்றும் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

திருப்பூரில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


குன்னுாரில் கடும் மேகமூட்டம்
latest tamil news
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று காலை நிலவரப்படி, கடந்த, 24 மணி நேரத்தில் 13 மி.மீ., மழை பதிவானது.மழையால், குன்னூர் உபாசி சாலையில், சில்வர் ஓக் மரம் விழுந்தது.தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர்கள் சந்திரபோஸ், முரளி பிரபு, குமார் உட்பட தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் மேக மூட்டம் நிலவியதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அதிக மேகமூட்டம் நிலவுவதால், விபத்துக்களை தவிர்க்க குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Rajasekaran - Chennai,இந்தியா
20-ஜூலை-202110:28:50 IST Report Abuse
V Rajasekaran மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும் . அரசையே குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது . காசுக்கு ஓட்டைவிற்றுவிட்டு அரசாங்கங்கல்களை குறை சொல்லி என்ன பயன் ? வீட்டு குப்பைகளை வெளியே எறிந்துவிட்டு பிறரை குறை சொல்லி பயன் உண்டா ? நல்ல காரியங்களை தனிமனிதன் துவங்கவேண்டும்.
Rate this:
Cancel
18-ஜூலை-202118:13:22 IST Report Abuse
அப்புசாமி மக்கள் மழையைப் பாத்துதான் மகிழ்ச்சி அடையணும். வெட்டிநடை போட்டவங்க போச்சு. புது விடியலும் கிடையாது.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-ஜூலை-202111:03:01 IST Report Abuse
S.Baliah Seer மழை நல்ல விஷயம் தான்.ஆனால் எங்கு பார்த்தாலும் பாலிதீன் கழிவுகளும் ,குப்பை துர்நாற்றமும் வீசும்போது மழையினால் எண்ணற்ற நோய்கள் உற்பத்தியாகின்றன.மத்திய ,மாநில அரசுகள் பாலிதீன் கவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X