மணல் கடத்தல் வாகனங்கள், டிரைவர்கள் விடுவிப்பு: விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்படுவாரா?

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (64)
Advertisement
திருச்சி: மணல் கடத்தல் வாகனங்கள் மற்றும் டிரைவர்களை விடுவித்த விவகாரத்தில் மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, கலெக்டரும் சிக்கியுள்ளாரா? என, உளவுத்துறை போலீசார் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.திருச்சி மணப்பாறை அருகில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., பிரமுகர் ஆரோக்கியசாமி
மணல் கடத்தல், வாகனங்கள், திருச்சி, கலெக்டர்,  டிரைவர்கள், விடுவிப்பு

திருச்சி: மணல் கடத்தல் வாகனங்கள் மற்றும் டிரைவர்களை விடுவித்த விவகாரத்தில் மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, கலெக்டரும் சிக்கியுள்ளாரா? என, உளவுத்துறை போலீசார் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., பிரமுகர் ஆரோக்கியசாமி மிரட்டலுக்கு பயந்து கடத்தலில் ஈடுப்பட்ட மூவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என, கலெக்டருக்கு, மூத்த அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை விடுவித்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டா்.


latest tamil news
மணல் கடத்தலை மறைக்கும் முயற்சியில் திரைமறைவில் ஈடுப்பட்ட மூத்த அமைச்சர் பற்றிய தகவல் உளவுத்துறை வாயிலாக, கட்சித் தலைமைக்கு சென்றது. அதன் விளைவு ஆரோக்கியசாமியின் ஒன்றிய செயலர் பதவி பறிக்கப்பட்டது.


latest tamil news
கலெக்டரை கையில் வைத்துக் கொண்டு காப்பாற்றுகிற நடவடிக்கையில் ஈடுப்படக்கூடாது என, மூத்த அமைச்சருக்கு கட்சி மேலிடம் தரப்பில் செம டோஸ் விடுவிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, தனக்கு கீழே உள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனால் ஏற்கனவே, கலெக்டர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, மணல் விவகாரம் தொடர்பாக, கலெக்டர் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்படுவாரா? என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
22-ஜூலை-202109:08:58 IST Report Abuse
Charles மலய தூளாக்கி கடப்பா அருகில் வெறும் குழிகளாக மாற்றியவர்கள் கர்நாடகாவிலும், அதேபோல் மதுரையிலும் இருக்கிறார்கள் இது வெறும் மணல் சம்பந்தம் தாநயப்பா
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
19-ஜூலை-202119:37:17 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) ACCUSED SHOULD BE PUT BEHIND THE BAR . NO BAIL. FIND OUT WHO PUT PRESSURE ON GOVT OFFICIALS THEY SHOULD BE SUSPENDED FROM POLITICAL PARTY THAT THEY WILL NOT DO DEFINITELY. IT WILL CONTINUE IN ANOTHER FORM IN FUTURE.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
19-ஜூலை-202111:22:58 IST Report Abuse
NARAYANAN.V களை வாரிசு தன் கட்சிக்காரர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மணல் கொள்ளையன் ஆரோக்கியசாமியைக் காப்பாற்ற கலெக்ட்டருக்கு அரசியல் அழுத்தம் கொடுத்த மூத்த அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.அதற்கும் அதிகப்படியான படிப்பினையைக் கொடுப்பது அவர்களது உட்கட்சி விவகாரம்.இந்த விவகாரத்தில் களை வாரிசு எடுக்கும் நடவடிக்கை தன் கட்சிக்காரர்களைக் குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது கப்சுப் என்று இருக்க வைக்கவேண்டும்.இந்த விவகாரத்தில் மட்டுமின்றி இதுபோல் திருச்சி,மணப்பாறை,கரூர் ஏரியாக்களில் உள்ள மணல் மாப்பியாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த மூத்த அரசியல்வாதி ஆரோக்கியசாமிகளுக்கெல்லாம் தலைவராக ஆகிவிடுவார்.இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையை நடத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X