திருச்சி: மணல் கடத்தல் வாகனங்கள் மற்றும் டிரைவர்களை விடுவித்த விவகாரத்தில் மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, கலெக்டரும் சிக்கியுள்ளாரா? என, உளவுத்துறை போலீசார் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க., பிரமுகர் ஆரோக்கியசாமி மிரட்டலுக்கு பயந்து கடத்தலில் ஈடுப்பட்ட மூவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என, கலெக்டருக்கு, மூத்த அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை விடுவித்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டா்.

மணல் கடத்தலை மறைக்கும் முயற்சியில் திரைமறைவில் ஈடுப்பட்ட மூத்த அமைச்சர் பற்றிய தகவல் உளவுத்துறை வாயிலாக, கட்சித் தலைமைக்கு சென்றது. அதன் விளைவு ஆரோக்கியசாமியின் ஒன்றிய செயலர் பதவி பறிக்கப்பட்டது.

கலெக்டரை கையில் வைத்துக் கொண்டு காப்பாற்றுகிற நடவடிக்கையில் ஈடுப்படக்கூடாது என, மூத்த அமைச்சருக்கு கட்சி மேலிடம் தரப்பில் செம டோஸ் விடுவிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, தனக்கு கீழே உள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனால் ஏற்கனவே, கலெக்டர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, மணல் விவகாரம் தொடர்பாக, கலெக்டர் மீண்டும் இடம் மாற்றம் செய்யப்படுவாரா? என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE