மும்பையில் தொடரும் மழை: சுவர் இடிந்து 22 பேர் பலி

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்தும், மண் சரிந்த சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். மும்பை கிழக்கு மற்றும் மத்திய புறநகர் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்தது.மும்பையில், பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள்
மும்பை, கனமழை, சுவர், பலி, உயிரிழப்பு, இரங்கல், ஆறுதல்

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்தும், மண் சரிந்த சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். மும்பை கிழக்கு மற்றும் மத்திய புறநகர் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்தது.


latest tamil news



மும்பையில், பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஒரு சில இடங்களில் 200 மி.மீ.,க்கு மேல் மழை பதிவானது.


latest tamil news




இந்நிலையில், செம்பூர் பகுதியில் உள்ள பரத் நகரில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


latest tamil news




விக்ரோலி பகுதியில், இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பந்தப் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.


latest tamil news



பிரதமர் ஆறுதல்


18 பேர் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது மனம் உள்ளது. காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டி கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-202118:11:47 IST Report Abuse
அப்புசாமி பலியானசர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள். அதுசரி, எல்லோருக்கும் வூடு திட்டத்தில் வீடுகள் குடுத்து முடிச்சாச்சா?
Rate this:
Cancel
18-ஜூலை-202112:52:25 IST Report Abuse
மும்பை நாநா இரவு முழுவதும் கடுமையான மழை. காலையில் மின்சாரம், வோடபோன் நெட்வொர்க் இல்லை. இப்போது வந்த செய்தி குடி தண்ணீர் இன்று சப்ளை ரத்து.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-202111:46:23 IST Report Abuse
vpurushothaman ஒவ்வோராண்டும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X