காங்கிரஸ் பார்லிமென்ட் குழு மாற்றி அமைப்பு: சோனியா நடவடிக்கை

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, கட்சியின் பார்லிமென்ட் குழுக்களை அமைத்துள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: பார்லி.,யின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்ய நிர்வாக
Sonia, Reconstitutes, Congress Parliamentary, Hierarchy

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, கட்சியின் பார்லிமென்ட் குழுக்களை அமைத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: பார்லி.,யின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்துள்ளேன். இரு குழுக்கள் நாள்தோறும் கூடி, அலுவல் தொடர்பாக விவாதிக்கும். அதுமட்டுமல்லாமல் பார்லிமென்டில் முக்கிய விவாதங்கள் நடக்கும் முன்பாகவும், கூட்டத்தொடர் இடையேயும் கூடி விவாதித்து முடிவு எடுப்பார்கள். இரு குழுவையும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டி ஆலோசனை நடத்துவார்.


latest tamil news


இதன்படி, லோக்சபா தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார், துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். லோக்சபாவின் தலைமைக் கொறடாவாக கே.சுரேஷ் செயல்படுவார். ரவ்னீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் கொறடாக்களாக இருப்பார்கள். காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, சசி தரூர் ஆகியோர் கொறடா குழுவில் இடம் பெறுவர்.

ராஜ்யசபா தலைவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுவார், துணைத் தலைவராக ஆனந்த் சர்மா இருப்பார். தலைமைக் கொறடாவாக ஜெய்ராம் ரமேஷும், கொறடா குழுவில் அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூலை-202102:59:56 IST Report Abuse
Cheran Perumal கொறடாக்களுக்கு என அரசு சலுகை எதுவும் உண்டா? பேசாமல் அனைத்து எம்பிக்களையும் இணை துணை பகுதி ஒன்றிய கொறடாக்களாக நியமித்து விடுங்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூலை-202122:01:16 IST Report Abuse
Ramesh Sargam சரியான தேர்வு. ஊழலில் கொட்டை போட்டவர்கள்தான், கொறடாவாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-ஜூலை-202116:09:00 IST Report Abuse
vnatarajan எதற்கு இதனை கோரோடாக்கள் எல்லோரும் சேர்ந்து கும்மி அடிக்கப்போகிறார்களா. பரவாயில்லை எல்லோருமமும் பதவி கொடுத்துவிட்டார்கள் சோமநீ குக்ஸ் ஸ்பாயில் தி புட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X