ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில் எளிமையாக வசித்து வரும் மத்திய இணை அமைச்சரின் பெற்றோர்

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
நாமக்கல்: கிராமத்தில் இருந்து, தனது அயராத உழைப்பால் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனின் பெற்றோர், எளிமையாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில், எளிமையாக வசிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், 65, வருதம்பாள், 60. இந்த தம்பதியருக்கு, முருகன், ராமசாமி என்ற இரண்டு மகன்கள். அதில், இரண்டாவது மகன், 2016ல், உடல்நிலை பாதிக்கப்பட்டு
BJP, Murugan, Parents, பாஜக, முருகன், பெற்றோர்கள்

நாமக்கல்: கிராமத்தில் இருந்து, தனது அயராத உழைப்பால் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனின் பெற்றோர், எளிமையாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில், எளிமையாக வசிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், 65, வருதம்பாள், 60. இந்த தம்பதியருக்கு, முருகன், ராமசாமி என்ற இரண்டு மகன்கள். அதில், இரண்டாவது மகன், 2016ல், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். மூத்த மகன் முருகன் தற்போது, மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து, ஒரே மத்திய அமைச்சராக பதவியேற்றிருப்பவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற போதும், எவ்வித ஆடம்பரமும் இன்றி, எளிமையாக, விவசாயப்பணியை மேற்கொண்டு வருகின்றனர், அவரது பெற்றோர்.


latest tamil newsவக்கீல் படிப்பை முடித்த முருகன், பா.ஜ.,வில் இணைந்து, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில துணைத் தலைவர், தாழ்த்தபட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர், பா.ஜ., மாநில தலைவர் என, படிப்படியாக உயர்ந்து, தற்போது, மத்திய இணை அமைச்சர் என்ற உச்சத்தை எட்டி உள்ளார். அவருக்கு, கலையரசி என்ற மனைவி உள்ளார். அவர், சென்னையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும் பிளஸ் 2 படிக்கும் தர்னீஷ் என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், இந்திரஜித் என்ற மகனும் உள்ளனர்.


latest tamil newsதனது மகன், போலீஸ் பாதுகாப்புடன், சைரன் காரில் வலம் வந்தாலும், அவரது பெற்றோர், ஹாலோபிளாக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில், எளிமையாக வசிக்கின்றனர். இது குறித்து, அவரது தந்தை லோகநாதன் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் முருகன், இரண்டாவது மகன் ராமசாமி. அவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள். 2016ல், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். மருமகள் சாந்தி, மூன்று பேரக்குழந்தைகள் எங்களுடன்தான் உள்ளனர். நான், 16 வயதில், விவசாய பணிக்கு வந்துவிட்டேன். மனைவி வருதாம்பாள். முருகன், சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பார்.

இங்குள்ள துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியிலும், பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், படிப்பை முடித்தார். தொடர்ந்து, வக்கீல் படித்து முடித்தார். படிப்படியாக உயர்ந்து, தற்போது, அமைச்சராகி உள்ளார். இது, எங்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடன் தங்கச்சொல்லி அழைப்பார். ஆனால், நாங்கள் தான் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsமத்திய இணை அமைச்சர் முருகனின் நண்பரும், வக்கீலுமான பொன்னுசாமி கூறியதாவது: எனது நண்பர் முருகன், தனது இளமைக்கால கல்வியை சொந்த கிராமத்திலும், மேல்நிலைப்பள்ளியை, பரமத்தியிலும் முடித்தார். தொடர்ந்து, சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லுாரியில், ஐந்து ஆண்டுகள், பி.எல்., பட்டம் முடித்தார். அதையடுத்து, சென்னை பல்கலையில், எம்.எல்., பி.எச்.டி.,பட்டம் பெற்றார். படிக்கின்ற காலத்தில், அகில பாரத வித்யார்த்தி பரீசத் (ஏ.பி.வி.பி.,) மாணவர் அமைப்பில் இணைந்தார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., கூட்டங்களில் பங்கேற்றார். 15 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றினார். பா.ஜ.,வில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில துணைத்தலைவர் மற்றும் தேசிய தலைவர் பதவி வகித்தார். அதையடுத்து, தாழ்த்தப்பட்டோர் ஆணை தேசிய துணைத்தலைவர், பா.ஜ., மாநில தலைவர் என, படிப்படியாக உயர்ந்தார். தற்போது, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இது, அவரது உழைப்புக்கு கிடைத்த பரிசு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATESAN V - VANIYAMBADI,இந்தியா
22-ஜூலை-202109:46:56 IST Report Abuse
VENKATESAN  V ஐயா மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவருடைய சட்டமன்ற தேர்தல் விண்ணப்பத்தில் ஒன்றரை கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார் அப்படி இருந்தும் அப்பா அம்மாவிற்கு ஏன் ஒரு வீடு கட்டித்தரவில்லை?. அவரிருப்பது இழுக்கு தான்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
22-ஜூலை-202100:45:00 IST Report Abuse
Amal Anandan 15 வருஷமா வக்கீல் தொழில் செய்தவர் நல்லாத்தான் காத்திருப்பார்
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-ஜூலை-202111:17:49 IST Report Abuse
sahayadhas பரவா இல்லை பெரிய வீடு சீக்கிரம் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X