லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலுக்காக மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து தங்கள் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்தும், தங்கள் கட்சி நிலைப்பாடு குறித்தும் காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்ததாவது: மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை இடங்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் அல்லது அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் கூட்டணியை நிராகரிக்கவில்லை. நாங்கள் கூட்டணி வைப்பது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம். எங்கள் நோக்கம் பா.ஜ.,வை தோற்கடிப்பதே. இதற்கு மற்ற அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

கட்சி என் முன்னிலையில் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. நான் இங்கே இல்லாத நேரத்திலும் எங்கள் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கோவிட் பரவலின்போது நாங்கள் அதிகபட்ச வேலைகளைச் செய்துள்ளோம். நாங்கள் தான் பிரச்னைகளை எழுப்பியுள்ளோம். எங்கள் கட்சி உ.பி.,யில் 30 - 32 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. இருப்பினும், முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நிறைய ஆற்றல் (கட்சிக்குள்) வந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் சேவா தளத்தை சீரமைக்க திட்டங்கள் உள்ளன. இவ்வாறு பிரியங்கா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE