பொது செய்தி

இந்தியா

'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'கோவிஷீல்டு' தடுப்பூசியை 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. எனவே இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அந்த நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை' என, சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை
 'கோவிஷீல்டு' ,தடுப்பூசி,16 ஐரோப்பிய நாடுகள்,அங்கீகாரம்

புதுடில்லி:'நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'கோவிஷீல்டு' தடுப்பூசியை 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. எனவே இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அந்த நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை' என, சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தன. அந்த தடுப்பூசியை மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம், நம் நாட்டில் தயாரித்து வினியோகித்து வருகிறது.இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 16 ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.


தடையில்லை



இது குறித்து சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா கூறிய தாவது:ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துஉள்ளது.அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இரண்டு டோஸ் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை. கவனம்வெளிநாட்டு பயணியர், தங்கள் நாடுகளுக்குள் நுழைய ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விதிமுறைகளை பின்பற்றுகின்றன. பயணியர் அதை கவன முடன் அறிந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'பைஸர், மாடர்னா,ஆஸ்ட்ராஜெனகா' தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் போட்டு கொண்டவர்கள், பிரான்சிற்குள் நுழைய பரிசோதனை தேவையில்லை என, அந்த நாடு ஏற்கனவே அறிவித்து இருந்தது.இந்நிலையில் நம் நாட்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KATHIRAVANRENGARAJAN - Truchy,இந்தியா
19-ஜூலை-202113:48:23 IST Report Abuse
KATHIRAVANRENGARAJAN கோவாக்ஸின் நிலை என்ன ????
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-202108:06:53 IST Report Abuse
Kasimani Baskaran நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X