பொது செய்தி

இந்தியா

செல்லப் பிராணிகள் வளர்க்க தடை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொச்சி:கேரளாவில் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் செல்லப்பிராணிகள் வளர்க்க குடியிருப்பாளர் நலச்சங்கத்தினர் விதிக்கும் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் நாய் பூனை உட்பட செல்லப்பிராணி களை வளர்க்க குடியிருப்பாளர் நலச்சங்கம் தடை விதிக்கிறது.இதனை எதிர்த்து 'பீப்பிள் பார்
செல்ல பிராணிகள், வளர்க்க,தடை,எதிர்த்து,உயர் நீதிமன்றத்தில், மனு

கொச்சி:கேரளாவில் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் செல்லப்பிராணிகள் வளர்க்க குடியிருப்பாளர் நலச்சங்கத்தினர் விதிக்கும் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் நாய் பூனை உட்பட செல்லப்பிராணி களை வளர்க்க குடியிருப்பாளர் நலச்சங்கம் தடை விதிக்கிறது.இதனை எதிர்த்து 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' என்ற விலங்குகள் நல அமைப்பு கொச்சி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளது.

மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:வீட்டில் வசிப்போர் செல்லப்பிராணிகளை வளர்க்கக்கூடாது என குடியிருப்பாளர் நலச்சங்கத்தினர் கூறுவது சட்டவிரோதமான தன்னிச்சையான முடிவு.விலங்குகள் நல வாரியம் 2015ல் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பிறருக்கு தொந்தரவு இல்லாத வகையில் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கலாம்.இதற்கு எதிராக மாநிலம் முழுதும் குடியிருப்பாளர் நலச்சங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளில் வசிப்போர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை தடை செய்கின்றன.

வளர்ப்பு பிராணிகளை வேறு இடங்களில் விட்டு விடும்படி சங்கத்தினர் தொந்தரவு செய்வதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.விலங்குகள் நல வாரிய வழிகாட்டுதலின் கீழ் வீடுகளில் வசிப்போர் செல்லப்பிராணிகள் வளர்க்க குடியிருப்பாளர் சங்கத்தினர் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
19-ஜூலை-202109:00:05 IST Report Abuse
Kumar ஒரு விலங்கை எப்படி வளர்ப்பது என்ற அடிப்படை அறிவே இல்லாமல் பலர் வீடுகளில் வளர்க்கிறார்கள். அதற்கான அடிப்படை சுதந்திரம் கூட கொடுப்பதில்லை. நாய்கள் இரவு முழுவதும் கத்துவதற்க்கு முக்கிய காரணம் உள்ளது. வாழ்க் வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
19-ஜூலை-202108:28:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Eppo பார்த்தாலும் அவை குரைப்பது அதனின் அசுத்தங்கள் என்று பெரிய நியுசன்ஸ். அதுவும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற ரகங்கள் மிக பெரிய பிரிகுவண்சியில் குரைக்கும்போது வளற்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம் ஆனால் பக்கத்தில் இருப்பார் அதுவும் பள்ளி பாடங்களுக்கு இடையூறாக இருப்பதை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளுமா?
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
19-ஜூலை-202107:20:02 IST Report Abuse
Dharma நான் இருக்கும் அபார்ட்மெண்டில் எதிர் வீட்டில் வளர்க்கப்படும் நாய் இரவு முழுவதும் குரைந்துகொண்டே இருக்கிறது. தூங்க முடியவில்லை. முக கவசம் போட்டுகொண்டு போனால் உர்ரென்று முறைக்கிறது.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-ஜூலை-202120:57:37 IST Report Abuse
Sanny சிலர் செல்ல பிராணிகளை வார்ப்பது பகட்டு கௌரவத்துக்காக, ஆனால் வளர்க்கத்தெரியாது. முறையானப்பயிச்சிகள் கொடுத்தது முறையான்முறையில் கிழமையில் நான்கு, அல்லது ஐந்து நாட்களாக ஆவது நாயை வெளியில் நடைபயிச்சிக்கு குறைந்தது அரைமணி நேரமாவது கூட்டி போயிவரனும். அப்போதான் அந்த நாய்கள் பாகுபாடும், சொன்னதை செய்யும், கண்டபடி யாரைக்கண்டாலும் குறைக்கமாட்டாது. வீட்டில் சிறைப்பறவையாக யார் இருந்தாலும் மனநிலை பாதிக்கும், அடுத்தது அபார்மண்ட்டில் வாழப்பத்துக்கு என்றே சில இனநாய்கள் இருக்கு அதை தெரிவு செய்து வளர்ப்பது நல்லது, பிரச்சனை முடிந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X