அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் ஏன்: பொன்முடி விளக்கம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''மத்திய பாடத்திட்ட முடிவுகள் வந்த பின்னரேதமிழகத்தில் கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்கும்,'' என, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கும்.இன்ஜினியரிங் மாணவர்
கல்லுாரிகளில்,மாணவர்,சேர்க்கை,தாமதம் ஏன்,பொன்முடி, விளக்கம்

சென்னை:''மத்திய பாடத்திட்ட முடிவுகள் வந்த பின்னரேதமிழகத்தில் கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்கும்,'' என, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கும்.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவும் துவங்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு கல்லுாரி மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளது.

இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையும் அரசின் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அவரிடம் மாணவர் சேர்க்கை தாமதமாவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அளித்த பதில்:

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியானாலும், கல்லுாரி மாணவர் சேர்க்கை இப்போது துவங்காது. மத்திய இடைநிலை கல்வி பாடத் திட்டமான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளிவர வேண்டும். அந்த மாணவர்களும் கல்லுாரிகளில் சேர வேண்டும் என்பதால், மத்திய பாடத்திட்ட முடிவுகள் வெளியான பின்னரே மாணவர் சேர்க்கை துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த காலங்களில் மத்திய பாடத்திட்ட முடிவுகளுக்காக தமிழக மாணவர் சேர்க்கை தாமதமானதில்லை. இந்த ஆண்டு மத்திய பாடத்திட்ட மாணவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
19-ஜூலை-202113:47:03 IST Report Abuse
raja ஒன்றிய இடைநிலை கல்வி திட்டம் இல்லையா?... இப்போ மத்திய இடைநிலை கல்வித்திட்டம் என்று ஆகிவிட்டதா அமைச்சரே....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜூலை-202110:14:14 IST Report Abuse
duruvasar எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு கேள்வி கேட்டவர்களுக்கு அருமையான நெத்தியடி. கோல்டு முடி ன்னா கோல்ட் முடித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X