பொது செய்தி

தமிழ்நாடு

குழம்பாத குட்டையில் மீன் பிடிக்கலாமா?

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை ஆணைய சட்ட வரைவை எதிர்த்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளும், 'மீனவர்களை அழிக்கும் பொருட்டு கொண்டு வந்துள்ள சட்டம் இது' என்று குற்றச்சாட்டை உரக்க ஒலிக்கின்றன. ஆனால் உண்மை என்ன?மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்டம் புதிதல்ல. ஏற்கனவே இருக்கும், 'தமிழ்நாடு கடல் மீன்வள ஒழுங்குமுறை ஆணைய சட்டம் 1983'ன் மறுவடிவம் தான்.
 குழம்பாத, குட்டையில்,மீன்,பிடிக்கலாமா?

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை ஆணைய சட்ட வரைவை எதிர்த்து, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளும், 'மீனவர்களை அழிக்கும் பொருட்டு கொண்டு வந்துள்ள சட்டம் இது' என்று குற்றச்சாட்டை உரக்க ஒலிக்கின்றன. ஆனால் உண்மை என்ன?

மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்டம் புதிதல்ல. ஏற்கனவே இருக்கும், 'தமிழ்நாடு கடல்
மீன்வள ஒழுங்குமுறை ஆணைய சட்டம் 1983'ன் மறுவடிவம் தான். ஏற்கனவே சட்டம்
இருக்கும் போது புதிய சட்டம் எதற்கு, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் முயற்சி தானே இது என்ற கேள்வியும் எழுகிறது. டபிள்யூ.டி.ஓ., என்ற, பன்னாட்டு வர்த்தக கூட்டமைப்பில்,
இந்தியா ஓர் உறுப்பு நாடு. அதன்படி, கடலில் மீன் பிடிக்கும் தொழிலை முறைப்படுத்த,
ஒவ்வொரு நாடும் சட்டம் இயற்ற வேண்டும். அதனால் தான், தேசியஅளவிலான புதிய சட்டம் தயாராகி உள்ளது.

டபிள்யூ.டி.ஓ., சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என, கேள்வி எழுப்பலாம். கேட்காவிட்டால், இந்தியாவிலிருந்து மீன் மற்றும் கடல்வள பொருட்களை வாங்கக்கூடாது என, உறுப்பு நாடுகள் தடை விதிக்கலாம்; மீன் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். அதனால் தான், நம்
மீனவர்கள் நலன் காக்க புதிய சட்டம் இயற்றப்படுகிறது. அடுத்தபடியாக, தமிழ்நாடு அரசின்
சட்டத்தில் இல்லாத எதையும், புதிய சட்டம் சொல்லவில்லை. மாறாக பாரம்பரிய மீனவர்களுக்காக, பல புதிய சலுகைகள்வழங்கப்பட்டுள்ளன.


பொய் பிரசாரம்

உதாரணமாக, தமிழக அரசின் சட்டப்படி, விசைப்படகுகள் கரையிலிருந்து மூன்று கடல் மைல் தாண்டி மீன் பிடிக்கலாம். நாட்டுப் படகு மீனவர்களுக்கு, வெறும் மூன்று கடல் மைல் தான் தனிப்பட்ட பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளன.புதிய சட்டத்தில், 14 கடல் மைல் வரை, நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதைத் தாண்டியே, விசைப்படகுகள் மீன் பிடிக்க வேண்டும். 'கடலில் எப்படி எல்லை தெரியும்' என, சில மீனவர் சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா போடுவதற்காக வாதங்களை முன்வைக்கின்றனர்.

இன்று சிறிய நாட்டுப் படகு மீனவர் கூட ஜி.பி.எஸ்., கருவி இல்லாமல் கடலுக்கு செல்வதில்லை. இதன் நோக்கம், எங்கே மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அந்த இடத்தை பதிவு செய்து கொண்டு, மீண்டும் அதே இடத்திற்குச் செல்ல ஜி.பி.எஸ்., கருவியை பயன்படுத்துகின்றனர்.
அதே ஜி.பி.எஸ்., கருவியில், இந்திய எல்லை எங்கே முடிகிறது என்பதும் துல்லியமாகத்
தெரியும். ஓரிடத்தில் கிடைக்கும் மீன், வேறு இடத்தில் பிடிபடுவதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது; மீன்களுக்கும் எல்லை உண்டு. அது, இயற்கை போடும் எல்லைக்கோடு.படகுகளை பதிவு செய்வது பாமர மீனவனுக்கு கடினமாக இருக்கும்; பெரும் பணச் சுமையாகவும் இருக்கும் என்ற, குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

சாதாரண பைபர் படகு முதல், பெரிய மீன்பிடி கப்பல் வரை, இப்போதும் பதிவு செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஏதோ இதுவரை இல்லாதது போலவும், மோடி வந்து தான் பதிவு செய்யச் சொல்வது போலவும் பொய் பிரசாரம் செய்கின்றனர். இன்றும், பைபர் நாட்டுப் படகுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பதிவுக் கட்டணம் ஆண்டுக்கு 750 ரூபாய். எந்த மீனவராவது இதைச் சுமை என்று சொல்வாரா? ஆனால், அரசியல் தலைவர்கள் மீனவர் பெயரை சொல்லி கூசாமல் பொய் பேசுகின்றனர்.

பெரிய மீன்பிடி கப்பல்கள், 'கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய சட்டம் - 1973'ன் கீழ், இதுவரை பதிவு செய்யப்பட்டன. புதிய சட்டப்படி, 'இந்திய கடல் வாணிப சட்டம் - 1953'ன் கீழ் தான் பதிவு செய்ய வேண்டும். இரண்டுமே மத்திய அரசின் சட்டங்களே. அப்பாவி மீன்பிடி தொழிலாளர்கள் நலன் கருதியே, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மீனவர்கள் புலம்பல்

'ஒக்கி' புயலில் சிக்கிய சில மீனவர்களின் சோக கதைகளைக் கேட்டோம். 'பிளாஸ்டிக் கேனை கட்டிக் கொண்டு நீந்தி வந்தேன்; 4 மணி நேரம் நீந்தி வந்தோம்; அதற்கு மேல் நீந்த முடியாமல் என் தந்தை மூழ்கிவிட்டார்; மூன்று நாட்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; கரையிலிருந்து தகவல் சொல்ல முடியவில்லை' என, அப்போது பல மீனவர்கள் புலம்பினர். -இனிமேல், இதற்கெல்லாம் முற்றுப் புள்ளிதான்.

புதிய சட்டத்தின்படி, வெகுதொலைவு சென்று மீன் பிடிக்கும் விசைப் படகுகள், தகுந்த தகவல் பரிமாறும் கருவிகள்; ஒவ்வொரு மீன்பிடி தொழிலாளிக்கும் உயிர் காக்கும் ஜாக்கெட்; உயிர் காக்கும் மிதவைகள்; உயிர் தப்ப உதவும் சிறிய படகுகள் என பரிந்துரைக்கப்பட்டுள்ள
சாதனங்களுடன் தான் கடலுக்கு செல்ல முடியும். இல்லையெனில், இனிமேல் கடலுக்கு செல்ல முடியாது.இதில், லாபம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு; நஷ்டம் முதலாளிகளுக்கு.
அப்படியானால், கூக்குரல் அதிகம் வருவது இயல்பு தானே?

இப்போது சொல்லுங்கள், அரசியல்வாதிகள் யாருக்காக குரல் கொடுக்கின்றனர்?படகில்
பயன்படுத்தப்படும் இன்ஜின், வலையின் அளவு, இவற்றை எல்லாம் பற்றி ஆராய்ந்து
பார்த்தாலும், புதிய சட்டம் எல்லா வகையிலும் ஏற்றமுடையதாகவே இருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு யாரோ தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் காதை திருகி ஓரத்தில் உட்கார வையுங்கள். புதிய சட்டத்தை ஆதரித்து, 'மீனவ நண்பன்' என்ற பெயர்எடுங்கள் .
பா.பிரபாகரன்
எழுத்தாளர்

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
19-ஜூலை-202110:29:12 IST Report Abuse
balakrishnan இவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் உண்மையில் அது நல்ல திட்டமாகத்தான் இருக்கும் .
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
19-ஜூலை-202107:22:10 IST Report Abuse
அன்பு மீன் மனிதர்களின் உணவு தான். ஆனால், இன்னும் பத்து வருடங்களுக்கு யாரும் மீன் பிடிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள். கடலில் மீனே இல்லாதவாறு பிடித்து வருகிறார்கள். மக்களிடம் பணம் பெருகிவிட்டது. முன்பு மீனை வெறும் தொட்டுக்கொள்ள குறைவாக பயன்படுத்துவார்கள். இப்போது தொடங்கப்பட்டுள்ள சில சிறப்பு ஹோட்டல்களில் வெறும் மீனை மட்டுமே உணவாக உண்கிறார்கள். யு டியூபில் பார்த்தபோது தான், இந்த மாதிரி ஹோட்டல் தமிழகத்தில் உள்ளது என்று தெரியவந்தது. இப்படி வயிறு முழுக்க மீன்களை உண்டால், கடலில் மீன்கள் இருக்காது. உலக அளவில் மீன் தின்பதை பத்து ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும். மீன் மட்டுமின்றி, அணைத்து அசைவ உணவுகளையும் மனிதர்கள் தின்பதை தடை செய்ய வேண்டும். சைவ உணவையும் அளவாகத்தான் மக்கள் வாங்க வேண்டும். ஹோட்டல்களில் தேவை இல்லாதவற்றை தட்டில் வைத்து வீணடித்தால், அவர்கள் தண்டனை தொகை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இன்று ஜெர்மனிக்கு நேர்ந்த தி, உலகமெங்கும் விரைவில் நடக்கும். தமிழகம் தண்ணீருக்குள் புகும். உலக மக்கள் ரிசோரசிற்காக அடித்துக்கொள்ள வேண்டிய நேரம் விரைவில் வரும். மனிதர்கள் பழங்காலத்தை போன்று ஒரு நாடு இன்னொரு நாட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்கும் காலம் வரும். இப்போதே அளவுக்கு அதிகமாக தின்பதையும், வீணடிப்பதையும் உலகமக்கள் நிறுத்த வேண்டும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
19-ஜூலை-202113:21:04 IST Report Abuse
தமிழ்வேள்இங்கு உயிர்வாழ உணவு உண்ணவில்லை ....வகை வகையாக உண்பதற்காகவே உயிர்வாழ்கிறார்கள் ....இவர்களை திருத்த முடியாது ....ஆஸ்பத்திரிக்கு துட்டு அழவேண்டும் என்று விதி இருக்கிறது ..அதை மாற்ற இயலாது ...தமிழகம் சரியான தீனிப்பண்டார மாநிலமாகிவிட்டது ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X