ஸ்டாலினுக்கு முக்கிய பதவி?

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் திட்டம். இதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்த்து பா.ஜ.வுக்கு எதிராக நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.இது தொடர்பாக பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே சரத் பவார் மம்தா ஆகியோரை சந்தித்துவிட்டார்.ராகுலை சந்தித்தது இது
டில்லி உஷ், ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்,  பாஜ, அனுராக் தாக்கூர், முருகன்,  திமுக, தூர்தர்ஷன், கவர்னர், பன்வாரிலால், ராஜிவ் கொலையாளிகள், விடுதலை, பரோல்,

அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் திட்டம். இதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்த்து பா.ஜ.வுக்கு எதிராக நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.இது தொடர்பாக பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே சரத் பவார் மம்தா ஆகியோரை சந்தித்துவிட்டார்.ராகுலை சந்தித்தது இது விஷயமாகத் தான் என சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொடர்பில் இருந்து வருகிறார். முதல்வரின் மருமகனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருகின்றனர்.'எதிர்க்கட்சி கூட்டணிக்கு தென் மாநிலத்திலிருந்து ஒரு முக்கிய பதவி கொடுக்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் தகுதியானவர்' என மற்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் சொல்லி வருகிறாராம் பிரசாந்த்.


பா.ஜ.,வின் அதிரடி திட்டம்


மத்திய செய்தி ஒலிபரப்பு துறையின் அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தமிழகத்திற்காக ஒரு திட்டத்தை தயார் செய்து இணை அமைச்சர் முருகனிடம் கொடுத்துள்ளார்.அதில் 'தமிழகத்தில் பா.ஜ.வை எப்படி பலப்படுத்த வேண்டும். தமிழக பா.ஜ. தலைவர்களை எப்படி ஊடகத்துறையில் கொண்டு வர வேண்டும்' என விபரமாக சொல்லப்பட்டுள்ளதாம். இதற்கு கட்சி மேலிடமும் அனுமதி அளித்துவிட்டது.தமிழகத்தின் 'துார்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ'விற்கு ஆலோசகர்களாக பா.ஜ. தலைவர்களை நியமிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 'தமிழக ஊடகங்கள் அனைத்தும் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே துார்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் சேவைகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என பா.ஜ. தலைமை முடிவெடுத்துள்ளது.மற்றொரு பக்கம் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. 'அடுத்த லோக்சபா தேர்தலில் எப்படியாவது 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வேலையை துவக்குங்கள்' என முருகனிடம் சொல்லப்பட்டுள்ளதாம். இது பிரதமரின் கட்டளை என சொல்லப்படுகிறது.விரைவில் மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்துக்கு வரிசையாக படையெடுத்து வந்து மத்திய அரசின் திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல உள்ளனர்.


விடுதலை கிடையாது!



சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிரதமரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 'உங்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. விரைவில் புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார்' என மறைமுகமாக கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது.ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார்.'முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல. இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.'எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம்' என அதில் கூறப்பட்டுள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜூலை-202104:05:45 IST Report Abuse
meenakshisundaram அப்போ ஸ்டலினுக்கு ஒரு சில ஹிந்தி வார்த்தைகளேனும் கற்று தர ஒரு 'வாத்யார் 'ரெடி பண்ணனுமா -ஒரு சில ஆங்கில வார்த்தைகளை பேச வைத்ததே போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X