எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

காய்கறி விவசாயத்தை காப்பாற்ற வழி கிடைக்குமா

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
வேசடந்துார்:வேடசந்துார் தொகுதியில் அமைக்கப்பட்ட காய்கறி பதப்படுத்தும் நிலையம்எப்போது செயல்பாட்டுக்கு வருமோ என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.வேடசந்துார் சட்டசபை தொகுதியில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை என 3 ஒன்றியங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர்.வடமதுரை மற்றும் ஆர்.கோம்பை மலையடிவார
காய்கறி விவசாயத்தை காப்பாற்ற வழி கிடைக்குமா

வேசடந்துார்:வேடசந்துார் தொகுதியில் அமைக்கப்பட்ட காய்கறி பதப்படுத்தும் நிலையம்எப்போது செயல்பாட்டுக்கு வருமோ என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வேடசந்துார் சட்டசபை தொகுதியில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை என
3 ஒன்றியங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர்.வடமதுரை மற்றும் ஆர்.கோம்பை மலையடிவார
பகுதியில் வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி விவசாயத்தில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்பகுதியில் விளையும் காய்கறிகளை அன்றே விற்கும் நிலை உள்ளதால், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேன் பிடித்து கொண்டு செல்கின்றனர்.காய்கறிகளை பறித்த அன்றே விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் அழுகி வீணாகி
விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். சீசன் நேரங்களில் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விடுகிறது. இக்காலங்களில் விவசாயிகள் பெரும் நஷ்டமடைகின்றனர்.

எனவே அவற்றை இருப்பு வைத்து விலை உயரும்போது விற்றால் விவசாயிகள் பலனடைவர். இதற்காகவும், விவசாயிகளின் வீண் அலைச்சலை தவிர்க்கவும் குளிர்சாதன வசதியுடன்
பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.இதையடுத்து தமிழ்நாடு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், முதன்மை பதப்படுத்தும் நிலையம் வேடசந்துார் அருகே சேணண்கோட்டை பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டது. இந்த மையம் கட்டும் பணி முடிந்து நீண்ட நாட்களாகிறது.

ஆனால் இந்த மையத்திற்கான குளிர் சாதன இயந்திரங்கள் இதுவரை வந்து சேராததால்
தற்போதும் பயன்பாடற்று கிடக்கிறது. முறையாக இயந்திரங்களை இறக்குமதி செய்து, கோடிக்கணக்கில் செலவு செய்துள்ள அந்த கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் பயனடைவர்.விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விலை இல்லாத காலங்களில் குளிர்சாதன கிட்டங்கியில் பாதுகாத்து (கட்டணம் செலுத்தி), பிறகு தங்களுக்கு வேண்டிய நேரத்தில் அல்லது விலை கட்டுப்படியாகும் காலத்தில் விற்று பயனடைவர்.

வெளியூர் வியாபாரிகளும் வந்து செல்ல உள்ளதால்விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு இந்த சேமிப்பு கோடவுனை முறையான செயல்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.



விவசாயிகள் பயன்பெறுவர்



எஸ்.துரைபாபு, அய்யனார்கோவில், வேடசந்துார்: வேடசந்துார் தொகுதியில் காய்கறி சேமிப்பு கோடவுன் கட்டப்பட்டும் திறக்கப்படாதது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக உள்ளது. முருங்கைக்காய், தக்காளி சீசனில் விலை இருக்காது. அப்போது அவற்றை விற்க முடியாமல் வீதியில் கொட்டுகின்றனர். சிலர் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பர். இங்கு கட்டப்பட்டு வீணாக கிடக்கும் குளிர்சான சேமிப்பு கோடவுனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் விளைபொருட்களை பாதுகாப்பர். கட்டுப்படியான விலை வரும்போது விற்று பயன்பெறுவர். எல்லா காலங்களிலும் வியாபாரிகளும் வந்து செல்வர் என்பதால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.


உடனே செயல்படுத்த வேண்டும்



ஆர்.எம்.நடராஜன், இளைஞர் அணி தலைவர், தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம்: வேடசந்துார்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இது. காய்கறிகள் சேமிப்பு கோடவுன் கட்டி முடித்தும், ரூ.2 கோடி மதிப்பிலான கட்டடம் செயல்பாடின்றி கிடப்பது வேதனை தருகிறது. கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டிய இந்த கட்டடத்தை உடனே திறந்து, செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதேபோல இப்பகுதிக்கு சூரியகாந்தி கொள்முதல் நிலையமும் கொண்டு வரவேண்டும். தற்போது இப்பகுதி விவசாயிகள், சூரியகாந்தியை விற்க திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் செல்ல வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X