சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக பா.ஜ.,வின் திரளான தொண்டர்கள் கூட்டம், இன்று பேராற்றலுடன், ஒரு கடல் போல பொங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியால், 20 ஆண்டுகள் கழித்து, நான்கு எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம். நான்கு என்பது, 150 ஆக மாற வேண்டும்; நாம் மாற்றிக் காட்ட வேண்டும்.'டவுட்' தனபாலு: தமிழக பா.ஜ., தலைமை பொறுப்புக்கு வரும் அனைவரும்
 'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

தமிழக பா.ஜ.,வின் திரளான தொண்டர்கள் கூட்டம், இன்று பேராற்றலுடன், ஒரு கடல் போல பொங்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த பெருமுயற்சியால், 20 ஆண்டுகள் கழித்து, நான்கு எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம். நான்கு என்பது, 150 ஆக மாற வேண்டும்; நாம் மாற்றிக் காட்ட வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழக பா.ஜ., தலைமை பொறுப்புக்கு வரும் அனைவரும் இப்படித் தான் சொல்கின்றனர். 'அடுத்து, பா.ஜ., ஆட்சி தான்' என்கின்றனர். ஆனாலும் சறுக்கி விடுகிறது. சறுக்கியது எந்த இடம்; அதை சரி செய்வது எப்படி என்பதை கண்டறிவது தான் கஷ்டம். அதை நீங்கள் கண்டறிந்திருப்பீர்களோ என்பதே, பா.ஜ., தொண்டர்களின் 'டவுட்' ஆக உள்ளது!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு:

நீதிபதிகளின் கருத்துக்களை, அறநிலையத்துறை முழுமையாக ஏற்று, அவர்களே திருப்தி அடையும் வகையில், எங்கள் பணி இருக்கும். 70 நாட்களில் 570 கோடி ரூபாய் மதிப்பிலான 110 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ௧௦ ஆண்டுகளில் நடந்த பணிகளை, இந்த ஆட்சியில் 70 நாட்களிலேயே நடத்தி உள்ளோம்.

'டவுட்' தனபாலு: அறநிலையத்துறை அமைச்சராக தங்களை கட்சித் தலைமை நியமிக்கும் என, தியாகராஜன் உட்பட பலர் நினைத்திருந்த நேரத்தில், தகுதியான நபரைத் தான், அறநிலையத்துறைக்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பதில் 'டவுட்'டே இல்லை. எனினும், இன்னமும் கோவில்களில் நிறைய செய்ய வேண்டும். அவற்றையும் செய்யுங்கள்!lll

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

'கொரோனா காரணமாக கைது நடவடிக்கையை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மாநில அரசுகள் உயர் அதிகார குழுக்களை அமைத்து, தகுதியான கைதிகளை ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எவருக்கும், தமிழகத்தில் இதுவரை ஜாமின் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக தகுதியான கைதிகளுக்கு ஜாமின் வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: இதுபோன்ற வித்தியாசமான கோரிக்கைகளை விடுக்க, 'ரூம்' போட்டு யோசித்தீர்களோ என்ற 'டவுட்' ஆளும் கட்சிக்கு வந்திருக்கும். ஏனெனில் யாருமே கண்டுக்காத ஒரு விவகாரத்தை பிடித்து, அதை வலியுறுத்தினால் தான், ஊடகங்களிலும் செய்தி வரும் என்பதை சக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டீர்களே... சபாஷ்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
19-ஜூலை-202115:35:27 IST Report Abuse
Mohan வி.சி.கட்சி ஆளுங்க நிறைய பேர் உள்ள இருக்காங்க போலிருக்கு.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
19-ஜூலை-202114:01:52 IST Report Abuse
Suppan திருமா அய்யா உங்கள் கட்சிக்கார ஆசாமிகளை விடுவிக்கத்தானே இந்த நாடகம்?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஜூலை-202106:19:37 IST Report Abuse
D.Ambujavalli அந்த நாலு சீட்டை வெல்லக்கூட நீங்கள் Ammaa , எம் ஜி ஆர் பெயரைத்தான் உபயோகித்தேர்கள் என்பதை மக்கள் மறப்பார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X