தமிழ்நாடு

குளங்களை காணோம்! ஸ்மார்ட் சிட்டி பணிகளால்குளங்களின் பரப்பு மாயம்:சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை;ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால், கோவையில் உள்ள குளங்களில் நீர் தேக்கும் பரப்பு எத்தனை ஏக்கர் சுருக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோருக்கு, இயற்கை ஆர்வலர்கள் மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றனர்.'சிறுதுளி', கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'ராக்' மற்றும் 'க்யூப்' உள்ளிட்ட, 11 அமைப்புகள் ஒன்றிணைந்து,
 குளங்களை காணோம்! ஸ்மார்ட் சிட்டி பணிகளால்குளங்களின் பரப்பு மாயம்:சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

கோவை;ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால், கோவையில் உள்ள குளங்களில் நீர் தேக்கும் பரப்பு எத்தனை ஏக்கர் சுருக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோருக்கு, இயற்கை ஆர்வலர்கள் மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றனர்.'சிறுதுளி', கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'ராக்' மற்றும் 'க்யூப்' உள்ளிட்ட, 11 அமைப்புகள் ஒன்றிணைந்து, கோவையில் உள்ள குளங்களை ஆய்வு செய்தன.

மாநகராட்சியின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் மற்றும் நீர் வளத்துறை செயல்படுத்தும் திட்டங்களால், என்னென்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பட்டியலிட்டு, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன.இதில், குளங்களில் நீர்த்தேக்கம் பரப்பு எத்தனை ஏக்கர் சுருக்கப்பட்டுள்ளது என்பதை, சேட்டிலைட் வரைபடத்துடன், அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
செல்வ சிந்தாமணி குளத்தில் நீர் தேக்கும் பரப்பு, 36.81 ஏக்கர். 2018ல், 29.2 ஏக்கராக சுருங்கியுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால், மேலும், 2.59 ஏக்கர் சுருங்கி, 26.61 ஏக்கரே மீதமிருக்கிறது. நீர் தேங்கும் பரப்பு மொத்தம், 10.2 ஏக்கர் சுருங்கியிருக்கிறது.குறிச்சி குளத்தில், 34.89 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு சுருக்கப்பட்டுள்ளது.
இதில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிக்காக மட்டும், 4.89 ஏக்கர் நீர் தேக்கும் பரப்பு கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்குளத்தில், 334.08 ஏக்கருக்கு நீர் தேக்கலாம்; 299.19 ஏக்கரே மிச்சமிருக்கிறது.இதேபோல், உக்கடம் பெரிய குளத்தில், 8.95 ஏக்கர், கிருஷ்ணாம்பதியில், 37.99 ஏக்கர் நீர் தேக்கும் பரப்பு சுருக்கப்பட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோருக்கு, அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.
இதை கண்காணித்து, நீர் தேக்கும் பரப்பை சுருக்க விடாமல் தடுக்க வேண்டிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.இது தொடர்பாக, அவர்களிடம் விசாரித்தால், 'கோவை நகர பகுதியில் உள்ள குளங்களை, நீண்ட கால குத்தகைக்கு மாநகராட்சியிடம் வழங்கி விட்டோம்' என, நழுவுகின்றனர்.
பராமரிப்புக்காக மட்டுமே மாநகராட்சி வசம் வழங்கப்பட்டு உள்ளது; நீர் தேக்கும் பரப்பை சுருக்கினால், குத்தகைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய, பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை உணராமல், அத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.* செல்வ சிந்தாமணி குளத்தில் நீர் தேக்கும் பரப்பு, 36.81 ஏக்கர். 2018ல், 29.2 ஏக்கராக சுருங்கியுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால், மேலும், 2.59 ஏக்கர் சுருங்கி, 26.61 ஏக்கரே மீதமிருக்கிறது.
நீர் தேங்கும் பரப்பு மொத்தம், 10.2 ஏக்கர் சுருங்கியிருக்கிறது.* குறிச்சி குளத்தில், 34.89 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு சுருக்கப்பட்டுள்ளது. இதில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிக்காக மட்டும், 4.89 ஏக்கர் நீர் தேக்கும் பரப்பு கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்குளத்தில், 334.08 ஏக்கருக்கு நீர் தேக்கலாம்; 299.19 ஏக்கரே மிச்சமிருக்கிறது.* உக்கடம் பெரிய குளத்தில், 8.95 ஏக்கர், கிருஷ்ணாம்பதியில், 37.99 ஏக்கர் நீர் தேக்கும் பரப்பு சுருக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூலை-202109:10:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஸ்மார்ட் -ஆடீம்கா பீசப்பி ஆட்சியில் ஸ்மார்ட் என்றால் கொள்ளைன்னு அர்த்தம். களவாணிக் கூட்டம்.
Rate this:
20-ஜூலை-202105:19:24 IST Report Abuse
ராஜாஎன்ன ஒரு புத்திசாலித்தனம் போங்க!...
Rate this:
Cancel
19-ஜூலை-202106:39:08 IST Report Abuse
ராஜா உலகத்தமிழ் மாநாடு நடந்த போது கோவையில் நிறைய நிலங்கள் காணாமல் போனதே அப்பிடியா? நீர்நிலைகள் பாதுகாப்பு சிறந்த எதிர்காலத்துக்கு உத்திரவாதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X