பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்க கேரளாவில் புதிய திட்டம்

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவனந்தபுரம்-பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க கேரளாவில் 'பிங்க்' பாதுகாப்பு திட்டம்இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் கூறுகையில் 'கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான

திருவனந்தபுரம்-பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க கேரளாவில் 'பிங்க்' பாதுகாப்பு திட்டம்இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.latest tamil news


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் கூறுகையில் 'கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன.பெண்களை பாதுகாக்க 'பிங்க்' பாதுகாப்பு திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும்' என்றார். இந்நிலையில் பிங்க் பாதுகாப்பு திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிங்க் பாதுகாப்பு திட்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுவர். வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவது தெரிந்தால் அது பற்றி விசாரிக்க பிங்க் பாதுகாப்பு திட்டத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


latest tamil newsஇதில் உள்ள பெண் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் பக்கத்து வீட்டினர் உள்ளூர் மக்களிடம் விசாரித்து தகவல்களை சேகரித்து அப்பகுதி போலீஸ் நிலையத்தில் தெரிவிப்பர். அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.பஸ் நிலையங்கள் கல்லுாரி வாயில்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண உடையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பெண்களிடம் வன்முறை மற்றும் தவறாக நடந்து கொள்வோரை கண்காணித்து பிடிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஜூலை-202110:06:50 IST Report Abuse
duruvasar இதுக்கெல்லாம் கனி அக்கா மெழுகவர்த்தியை கொஞ்சநாளா கையில் எடுக்காதது தான் காரணம். கொஞ்சம் பொறுங்க அஸ்ஸாமில ஏதாவது இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்கட்டும். அப்பறம் பாருங்க அக்காவின் ஆட்டத்தை. பிருந்தா கரத் பாட்டி வயது முதிர்வு காரணமாக முன்பு போல் அறிக்கைவிட முடியாமல் அவதிப்படுகிறார். இதெல்லாம் கொடுமை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-202108:01:39 IST Report Abuse
Kasimani Baskaran "கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண உடையில் பெண் போலீசார்" - இதெல்லாம் வேண்டாத ஆணி. சுற்றியிருக்கும் ஆண்கள் சில்மிசம் செய்பவர்களை தர்ம அடி கொடுத்தால் பெண்கள் மீது கைவைக்க பயப்படுவார்கள்.
Rate this:
Cancel
19-ஜூலை-202106:21:13 IST Report Abuse
ராஜா குற்றங்கள் பெருகிய மாநிலங்களில் கேரளாவுக்கு தனி இடம் உண்டு.
Rate this:
Kumar - chennai,இந்தியா
19-ஜூலை-202108:27:38 IST Report Abuse
KumarIt's because, in kerala people have enough awareness to report all the atrocites reported against women . It doesn't mean wormen in other states are living in heaven. In other states it is not at all reported due to family honour....
Rate this:
sankar - ghala,ஓமன்
19-ஜூலை-202110:07:39 IST Report Abuse
sankarkerala is the state with highest domestic violence, crime against women and children (especially girl child), political assassination and corruption, they are literate but not educated....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X